Published:Updated:

நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!

நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!
News
நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!

சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கோ.ஜீவிதா என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நூல் என்றாலும், சிதம்பரம் முதல் ஈரோடுவரை இந்த நூல் பல்வேறு மெட்ரிகுலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ்ப் பாடநூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Published:Updated:

நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!

சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கோ.ஜீவிதா என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நூல் என்றாலும், சிதம்பரம் முதல் ஈரோடுவரை இந்த நூல் பல்வேறு மெட்ரிகுலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ்ப் பாடநூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!
News
நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!

`பான்டிங் 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பிரிங் பேட்டில் ஆடினார்', `அண்டர்டேக்கருக்கு மொத்தம் ஏழு உயிர் இருக்கு', `எம்.ஜி.ஆர். சமாதியில் காதை வைத்தால் டிக் டிக் என்ற அவரின் கடிகாரச் சத்தம் கேட்கும்'... இவையெல்லாம் ஸ்மார்ட்போன், சமூக வலைதள யுகத்துக்கு முன்பு 90-ஸ் கிட்ஸ்களிடமும், அந்தத் தலைமுறையிடமும் பரவலாகப் பரப்பப்பட்ட புரளிகள். ஆனால் ஸ்மார்ட்போனும், சமூக வலைதளங்களும் வந்தபிறகு அவற்றைவிடவும் மிக அதிக அளவில் புரளிகள் பரப்பப்பட்டன. எது புரளி, எது உண்மைச்செய்தி என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு செய்தியோடு, செய்தியாக உண்மையாகக் கலக்கப்பட்டுவிட்டன.

இப்படி ஒன்றரை ஆண்டுக்கு முன் வலம்வந்த ஒரு புரளிதான், `நாசா வியந்த திருநள்ளாறு' என்ற புரளிக்கதை. அதாவது, நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தைக் கடக்கும்போது மூன்று நிமிடம் செயலிழந்ததாகவும், பின்னர் அந்தச் செயற்கைக்கோள் தானாகவே செயல்பட்டது எனவும் செய்தி பரவியது. இந்தக்கோயிலைக் கடக்கும்போது எந்த ஒரு செயற்கைக்கோளும் மூன்று நிமிடங்கள் செயலிழக்குமாம். இதற்குக் காரணம், சனி என்று சொல்லப்படும் Saturn கோளிலிருந்து கண்களுக்குப் புலப்படாத கருநீலக்கதிர்கள் அந்தக்கோயிலின் மீது ஒவ்வொரு நொடியும் விழுந்து கொண்டே இருக்கிறதாம். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியின்போது 45 நாள்கள் அந்தக் கதிர்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமாம்.

இந்தச் செய்தி சில செய்தித்தாள்களில்கூட வந்தது. ஆனால், அதை மறுத்த சிலர் இது பொய்யான தகவல் என்பதை எழுதினர். இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மூன்று வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``அது உண்மையான தகவல் இல்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவின் 10 செயற்கைக்கோள்கள் உலகைச் சுற்றி வருகின்றன. அவற்றில் ஒன்றிரண்டாவது அந்தக் கோயிலைக் கடக்கும். இதையும் தாண்டி பலர் இதைச்சொன்னதால் என் குழுவினரைக்கொண்டு நான் ஆராயச் சொன்னேன். அப்படியெதுவும் நடக்கவில்லை" என்று மறுத்துவிட்டார்.

நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!

ஆனால், இப்படிப்பட்ட தவறான செய்தி நான்காம் வகுப்பு பிள்ளைகளுக்கான பாடப்புத்தகத்தில் பாடமாக இடம்பெற்றிருப்பதுதான் அவலம். `மதுபன் எஜூகேஷன் புக்ஸ்' என்ற தனியார்ப் பதிப்பகம் நான்காம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடநூலாக `தமிழ் அருவி' என்ற நூலை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கோ.ஜீவிதா என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நூல் என்றாலும், சிதம்பரம் முதல் ஈரோடுவரை இந்த நூல் பல்வேறு மெட்ரிகுலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ்ப் பாடநூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து இந்த நூலை எழுதிய ஆசிரியர் கோ.ஜீவிதாவைத் தொடர்புகொண்டு பேசினோம். `நாசா வியந்த திருநள்ளாறு' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டபோது, ``அது எப்படி நீங்க தப்புன்னு சொல்றீங்க. இணையத்தில் அப்படித்தாங்க வருது. எதுவா இருந்தாலும் நீங்க இந்தப் பகுதியை அப்ரூவ் பண்ண பதிப்பகத்தில கேட்டுக்கோங்க" என்று சொல்லிவிட்டு, உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டார். இந்த நூலைப் பதிப்பித்த `மதுபன் எஜுகேஷன் புக்ஸ்' பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``போன வருடம்தான் இந்த நூலைப் பதிப்பித்தோம். அடுத்த வருடம் இந்தப் பாடத்தை நீக்கிவிடுவோம்" என்று கூறியவரிடம், ``எப்படி புரளிச்செய்தியைப் பதிப்பித்தீர்கள்? இந்த நூலை அங்கீகரித்த உங்கள் பதிப்பகத்தின் ஆய்வுக்குழுவில் உள்ளவர்களிடம் பேசவேண்டும்" என்று கேட்டபோது, ``இங்கே நாங்கள் விற்பனைப் பிரிவுதான் இருக்கிறோம். பதிப்பகத்தின் தலைமையிடம் டெல்லியில்தான் உள்ளது. மின்னஞ்சல் முகவரி கொடுக்கிறேன். மெயில் அனுப்புங்கள். நீங்கள், அவர்களிடம் பேசமுடியாது. அவங்களுக்கு இந்திதான் தெரியும்" என்றார். பின்னர் அவர் தொடர்பு மின்னஞ்சலை அனுப்பவில்லை.

இதுபோன்ற தனியார்ப் பதிப்பகங்களில் ஆய்வுக்குழு என்ற ஒரு பிரிவு இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ், ``தனியார்ப் பள்ளிகள் பலவற்றிலும் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவ்வாறு அரசால் ஏற்கப்பெறாத பாடநூல்கள் பாடமாக வைக்கப்படும் நிலை உள்ளது. தனியார்ப் பள்ளி சங்கங்கள் இவ்வாறு சில நூல்களைத் தேர்வு செய்து அவற்றைத் தங்கள் பள்ளிகளில் பாடநூலாக வைக்கிறார்கள். முன்னதாகச் செயல்வழிக்கல்வி நடைமுறையில் இருந்தபோது, பாடநூல்களுடன் பாட அட்டைகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களின் படைப்புத் திறனை ஊக்கப்படுத்தும் முறையில் கொண்டுவரப்பட்ட அந்த முயற்சியை பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் உற்சாகத்துடன் நடைமுறைப்படுத்தவில்லை. சில நேரங்களில் பெற்றோர்களும் அதில் ஆர்வம் காட்டுவதில்லை.

நாசா வியந்த திருநள்ளாறு... புரளியைக் கற்பிக்கும் தனியார்ப் பாடநூல்!

இப்படியான நிலையில் தனியார் நிறுவனங்கள் வெளியிடும் இத்தகைய பாடநூல்களைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகமாக உள்ளது. சமச்சீர் கல்விமுறை வந்தபோது, அரசின் பாடநூல்களையே கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நிலை தொடக்கத்தில் இருந்தது. அதுவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மீறப்பட்டது. இப்படித் தனியார் வெளியிடும் பாடநூல்கள் எந்தப் பரிசீலனையும், தகுதி வாய்ந்த கல்வித் துறை வல்லுநர்களின் ஒப்புதலும், அரசின் அனுமதியும் இல்லாமல் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிலை கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. இளம் வயதில் குழந்தைகள் மனதில் பதிய வைக்கப்படும் கருத்துகள், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்தாலும் அவர்களின் ஆளுமையில் அந்தக் கருத்துகள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். பகுத்தறிவுக்கு முற்றிலும் பொருந்தாத மூடநம்பிக்கைகளைப் போதிக்கும் நோக்கில் எழுதப்படும் இதுபோன்ற கருத்துகள் பாடநூல்கள் மூலம் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கதும்கூட.

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த மயில்சாமி அண்ணாதுரையே அந்தக் கருத்தை மறுத்துள்ளார். அப்படிப்பட்ட கருத்துகள் பாடநூல்கள் வழியாகக் குழந்தைகளின் மனதில் புகுத்துவது பெரிய தவறு. தனியார்ப் பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்த நூலை வாசித்தேன். திருநள்ளாறு குறித்து, எந்த அடிப்படையில் தெரிவித்துள்ளனர் என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. சில மதவாத அமைப்புகளே குறிப்பிட்ட பள்ளிகளை நாடு முழுவதும் நடத்துகின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சோதிடம், புரோகிதம் போன்றவை எல்லாம் பல்கலைக்கழகத்தில் பாடமாக்கப்பட வேண்டும் என்கிற முயற்சியை மத்திய அரசு செய்தபோது, இந்திய அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்களும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் அந்த முயற்சியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது நினைவுக்கு வருகிறது.

இன்று நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் தமிழக அரசு முயன்று உருவாக்கியுள்ள பாடத் திட்டமும் பாடநூல்களும், சிற்சில குறைகள் இருந்தபோதும், மிகவும் தரமிக்கதாக இருக்கின்றன. பள்ளிகள் அவற்றையே சொல்லித் தருதல் வேண்டும். வேறு ஏதும் பாடநூல்களை சிறப்பாகச் சொல்லித் தர வேண்டும் என்றால் அதற்கு முறைப்படி அரசின் அனுமதி பெற வேண்டும். கல்வியாளர் குழு ஒன்று பரிசீலித்த பின்னரே எதுவும் அனுமதிக்கப்பட வேண்டும். சில தனியார்ப் பள்ளிகளில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய `தமிழ் அருவி’ என்ற புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும்" என்றார்.

படங்கள்: youturn.in