Published:Updated:

`காதலிக்காக‌ எம்.பி.ஏ கேள்வித்தாளைத் திருடினார்!' - பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சிக்கிய ருசிகர கதை

`காதலிக்காக‌ எம்.பி.ஏ கேள்வித்தாளைத் திருடினார்!' - பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சிக்கிய ருசிகர கதை
`காதலிக்காக‌ எம்.பி.ஏ கேள்வித்தாளைத் திருடினார்!' - பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சிக்கிய ருசிகர கதை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் காதலிக்கு உதவுதற்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக எம்.பி.ஏ கேள்வித்தாளை சட்டவிரோதமாகக் கைப்பற்றிய பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவரை அம்மாநில போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 

`காதலிக்காக‌ எம்.பி.ஏ கேள்வித்தாளைத் திருடினார்!' - பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சிக்கிய ருசிகர கதை

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் செயல்பட்டு வருகிறது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் அந்தப் பகுதி நிர்வாகி ஃபெரோஸ் ஆலம் என்பவரின் காதலி அந்தப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்று வருவதாகத் தெரிகிறது. அவர் ஃபெரோஸிடம், அலிகார் பல்கலைக்கழக எம்.பி.ஏ கேள்வித்தாள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.பி.ஏ கேள்வித்தாளைப் பெற்றுத் தருமாறு ஃபெரோஸ் கானிடம் அவரின் காதலி வற்புறுத்தியிருக்கிறார். முதலில், பழைய கேள்வித்தாள் ஒன்றை பதில்களுடன் காதலிக்கு ஃபெரோஸ் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், அந்தக் கேள்வித்தாள் போலியானது என்பதைக் கண்டுகொண்ட அந்தப் பெண், ஃபெரோஸிடம் கோபித்துக் கொண்டதுடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். 

`காதலிக்காக‌ எம்.பி.ஏ கேள்வித்தாளைத் திருடினார்!' - பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சிக்கிய ருசிகர கதை

Photo Credit: ANI

இதனால், தன் காதலியைச் சாமதானப்படுத்தும் முனைப்பில் அந்தக் கேள்வித்தாளைப் பெற முயற்சி செய்திருக்கிறார் ஃபெரோஸ். அவர், தன் நண்பர் ஹைதருடன் இணைந்து அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர் இர்ஷாத் என்பவரின் உதவியை நாடியுள்ளனர். கேள்வித்தாளை எடுத்துத் தந்தால், அந்தப் பல்கலைக்கழகத்தில் இர்ஷாத்-தை பணி நிரந்தரம் செய்வதாகவும் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து, அந்தக் கேள்வித்தாளைப் பெற்ற அவர்கள், ஃபெரோஸின் காதலிக்குக் கொடுத்திருக்கிறார்கள். 

மேலும், அந்தக் கேள்வித்தாளை மற்ற மாணவர்களுக்கும் விற்பனை செய்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இதையடுத்து, கேள்வித்தாள் ஜெராக்ஸுக்குத் தலா ரூ.2,000 என்ற விலைவைத்து அவர்கள் விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்காகப் பிரத்யேக வாட்ஸப் குழு ஒன்றையும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விவகாரம் தெரியவரவே, ஃபெரோஸ், ஹைதர் மற்றும் இர்ஷாத் ஆகியோரைக் கைது செய்திருக்கிறோம். ஆனால், கைது செய்வதற்கு முன்பாகவே, 12-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அந்தக் கேள்வித்தாளை வாட்ஸப் குரூப்பில் விற்றிருக்கின்றனர். இதுகுறித்து அலிகார் பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம்'' என்றனர். கேள்வித்தாளை வெளிவிட்டதை ஒப்புக்கொண்ட ஃபெரோஸ், இந்தத் தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

`காதலிக்காக‌ எம்.பி.ஏ கேள்வித்தாளைத் திருடினார்!' - பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சிக்கிய ருசிகர கதை

இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் ஹைதர் என்பவரின் உறவினரான டெஹ்சீம் சித்திக் என்பவரின் வீட்டில் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டுக்கும் போலீஸார் சீல் வைத்துள்ளனர். சித்திக் என்பவர் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியில் கசிந்ததையடுத்து, ஃபெரோஸின் காதலி தலைமறைவாகியிருக்கிறார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.   
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு