Published:Updated:

``அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடமில்லை!” - ஒதுக்கும் வேளாண் பல்கலைக்கழகம்

நந்தினி பா

தமிழக மாணவர்களைப் புறக்கணித்து 40 சதவிகிதம்வரை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேரும்வகையில் சேர்க்கைக்கான விவரக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

``அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடமில்லை!” - ஒதுக்கும் வேளாண் பல்கலைக்கழகம்
``அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடமில்லை!” - ஒதுக்கும் வேளாண் பல்கலைக்கழகம்

மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதி வெளியிட்டது. வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆர்வமாக விண்ணப்பிக்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU), இந்த ஆண்டு முதல் முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் வரும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புக் கல்லூரிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தேசிய வேளாண் கல்வி அங்கீகாரக் குழுவின் (NAEAB) அங்கீகாரம் பெற்ற இதர கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் என்று அறிவித்ததுதான் காரணமாகக் கூறப்படுகிறது. விவசாயப் படிப்புகளைப் பொறுத்தவரை, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்தான் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் அமைப்பாக விளங்கிவருகிறது.

``அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடமில்லை!” - ஒதுக்கும் வேளாண் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லூரிகளுக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் அங்கீகாரம் இல்லை. அதனால், தாங்கள் விரும்பிய பட்ட மேற்படிப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல், அந்தக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னை கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால், சென்ற ஆண்டுவரை அனைத்து வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைப் படிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. 2017 செப்டம்பர் 5-ம் தேதி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள  ஓர் அறிக்கையிலும் 'தங்களின் அங்கீகாரம் என்பது கட்டாயமல்ல; மாற்றாக அது கல்லூரியின் தரம் மற்றும் மதிப்பினை உறுதிப்படுத்த கல்லூரிகள் தாங்களாகவே முன்வந்து பெறும் தரச்சான்று. இதனை காரணமாகக் கூறி, மாணவர் சேர்க்கையை மறுக்கக் கூடாது' என குறிப்பிட்டுள்ளது. அதனைப் பொருட்படுத்தாமலும், இளநிலைப் பட்டம் பயின்ற மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமலும் 

``அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடமில்லை!” - ஒதுக்கும் வேளாண் பல்கலைக்கழகம்

வேளாண் பல்கலைக்கழகம், இப்படித் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.

இதுதவிர, தமிழக மாணவர்களைப் புறக்கணித்து 40 சதவிகிதம்வரை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேரும்வகையில் சேர்க்கைக்கான விவரக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த தமிழக மாணவர்களில் சிலர், நேரடியாகவே இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் தேர்வானவர்கள் என்பதும் இதில் குறிப்பிட வேண்டும். 

இதுதொடர்பாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் படிப்புகளுக்கான தலைவர் ஜெ.எஸ்.கென்னடியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ”நாங்கள் எந்தக் கல்லூரி மாணவர்களையும்

``அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடமில்லை!” - ஒதுக்கும் வேளாண் பல்கலைக்கழகம்

புறக்கணிக்கவில்லை. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்லூரியின் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கல்லூரிகள்கூட ICAR அங்கீகாரம் பெற்றுவிட்டன. அப்படியிருக்கும்போது, பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் பெறுவதில் என்ன சிக்கல்? இப்படி ஒரு பிரச்னை இருப்பதாகப் புகார் ஏதும் எங்களுக்கு வரவில்லை. புகார் வந்தால் அதுகுறித்துப் பேசி முடிவெடுக்கிறோம்” என்கிறார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி முதல்வர் சாந்தா கோவிந்த்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, ”இந்தப் பிரச்னை தொடர்பாகப் பேசுவதற்குத்தான் டெல்லி சென்றுகொண்டிருக்கிறேன். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காதவகையில் நல்லபடியாகப் பேசி முடிவெடுக்கப்படும்” என்றார். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கே அங்கீகாரம் இல்லாத சூழலில், கடந்த ஏப்ரல் மாதம்தான் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் வழங்கும் குழுவினர் பார்வையிட வந்துள்ளனர். கல்வி நிர்வாகத்தின் இதுபோன்ற அலட்சியமான செயல்பாடுகளால் கடைசியில் பாதிக்கப்படுவது மாணவர்களின் எதிர்காலம்தான். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, அவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் இருப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டியது தமிழக அரசின் கடமை.

Vikatan