Published:Updated:

நீட் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #Guidelines #LetsLearn

நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான்கள் போல பல பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பல தேர்ச்சி மையங்கள் வெறும் வியாபார நோக்கங்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டவை. மாணவர் சேர்க்கை சமயத்தில் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் தண்ணீரில் எழுதியவை.

நீட் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #Guidelines #LetsLearn
நீட் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #Guidelines #LetsLearn

``என் புள்ள படிச்சு பெரிய டாக்டரா வருவான் "... தலையைச் சுத்தி காதைத் தொட்டு ஒண்ணாப்பு சேர்த்துவிட்ட காலங்களிலிருந்தே பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களின் ஒற்றைக் கனவு தன் மகனோ மகளோ மருத்துவர் ஆகிவிட வேண்டும் என்பதுதான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் கட்டாயம் என்றான பிறகு, திறமையான பல மாணவர்களுக்கு அந்தக் கனவு எட்டாக்கனியாகி விட்டது. நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களைத் தயார்படுத்த பல்வேறு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசும் மாநிலம் முழுவதும் 400-க்கும் அதிகமான இலவச  நீட் பயிற்சி மையங்களை அமைத்திருக்கிறது.

நீட் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #Guidelines #LetsLearn

நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், ஆன்லைன் வகுப்புகள், பயிற்சி புத்தகங்கள், குறிப்புகள் வழங்கும் மாணவர் அமைப்புகள், பயிற்சித் தேர்வுகள் நடத்தும் நிறுவனங்கள், உளவியல் ஆலோசனைகள் வழங்கும் ஆளுமைகள் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தனியார் பயிற்சி மையங்கள் ஏராளம் பெருகிவிட்டன. ஆனால் இதில் சரியான பயிற்சி நிறுவனத்தைத் தேர்வு செய்வதில்தான் பெரிய சவாலே அடங்கி இருக்கிறது. 

நீட் பயிற்சி மையங்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும், தனியார் நீட் பயிற்சி மையங்களில் சேர விரும்புவோர், கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் எவை... என முக்கிய தகவல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் கல்வியாளர் சோமசுந்தரம் அவர்கள். 

* பயிற்சி வழங்கும் ஆசிரியர்களின் தகுதி

நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேருவதே, கூடுதலான வழிகாட்டுதல் வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் அந்தப் பயிற்சி மையங்களில் வகுப்பெடுக்கும் ஆசிரியர்களின் திறன் எவ்வளவு என்பதைப் பொறுத்தே, பயிற்சி வகுப்பு பயனளிக்கும். எனவே முதலில் ஆசிரியர்களின் பின்னணி குறித்து தீர விசாரியுங்கள், முடிந்தால் மாணவர்களைக் குறிப்பிட்ட ஆசிரியர்களைச் சந்திக்க அழைத்துச் செல்லுங்கள். ஒரு மாணவருக்கான வழிகாட்டுதல், வெறும் வகுப்பறைகளோடு நின்று விடாமல், அதையும் தாண்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதில், ஒரு நிறுவனம் எவ்வளவு உடனக்குடன் செயலாற்றுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். 

நீட் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #Guidelines #LetsLearn

* புத்தகங்கள்

பயிற்சி அளிக்கும் ஆசிரியரின் திறன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு study materials என்று அழைக்கப்படும் பயிற்சிப் புத்தகங்களும் முக்கியம். பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் சில மணி நேரங்களே செலவிடப் போகிறார்கள். ஆனால், இந்தப் புத்தகங்களோடுதான் பல மணி நேரங்கள் செலவிடுவார்கள், அதற்குச் சிறந்த தரத்திலும், போதுமான அளவிலும், புத்தகங்கள் வழங்கப்படுகிறதா, அவை பயிற்சி மையத்தில் நாம் செலுத்தும் கட்டணத்தின் மதிப்புக்கு ஏற்றதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

* பயிற்சி மையத்தின் உள்கட்டமைப்பு

பிரமாண்டமான கட்டடமோ, பகட்டான வகுப்பறைகளோ அவசியம் இல்லை. ஆனால் நல்ல காற்றோட்டமான, அதிக நெருக்கடி இல்லாத வகுப்பறைகளாக இருக்க வேண்டும். சுத்தமான சுற்றுப்புறமும் அவசியம். ஒரு அட்டைப்பெட்டி போன்ற அறையில் அமர்ந்துகொண்டு படித்தால் அவர்களால் இயல்பாகப் படிக்க முடியாது. இருக்கமான சூழல் உளவியல் ரீதியாக மாணவர்களைப் பாதிக்கும். எனவே, குறைந்தபட்ச வசதிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* பயிற்சி அளிக்கும் நுட்பங்கள் 

ஒவ்வொரு பயிற்சி நிறுவனமும், அவர்களுக்கான பிரத்யேக முறையில் தேர்வைக் கையாள பயிற்சி அளிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் மனப்பாடம் செய்வது, பல மணி நேரம் படிப்பது ஆகிய முறைகளைக் கையாள்கிறது. சில மையங்கள் பயிற்சி தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில் எந்த முறை குறிப்பிட்ட மாணவருக்குச் சிறந்தது என்பதை சரியாகப் புரிந்துகொண்ட பின்னர் மாணவர்களைப் பயிற்சி மையங்களில் சேர்ப்பது உகந்தது. 

நீட் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #Guidelines #LetsLearn

* பயிற்சித் தேர்வுகள்

mock test எனப்படும் மாதிரித் தேர்வு மிகவும் முக்கியமானது. ஒரு மாணவர் நேரடியாக தேர்வைச் சந்திப்பது மிகவும் சவாலான விஷயம். நேர மேலாண்மையை இந்தப் பயிற்சி வகுப்பின் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் எத்தனை பயிற்சி தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படும், அந்தப் பயிற்சி வகுப்புகளுக்கான வினாத்தாள் எங்கிருந்து பெறப்படுகிறது என்பது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். 

* கட்டணம் எவ்வளவு?

நிறைய கட்டணம் வசூலிக்கும் இடத்தில்தான் தகுதியான பயிற்சி இருக்கும் என்ற புரிதல் முற்றிலும் தவறானது. கட்டணத்திற்கும் அளிக்கப்படும் பயிற்சிக்கும் தொடர்பே இல்லை. எனவே, உங்கள் பட்ஜெட்டிற்குள் ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் பயிற்சிக் கட்டணம் தவிர்த்து, போக்குவரத்து செலவு, வெளியூர் மாணவர்கள் என்றால் தங்குமிடம், உணவு ஆகிய பல செலவுகள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தனியார் நிறுவனங்களில் பயிற்சிக் கட்டணமாக 30,000 ரூபாயிலிருந்து ரூ.1.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இவைதவிர, தங்குமிடம் உணவு ஆகியவற்றிற்கு, குறைந்தது ஒரு மாணவருக்கு மாதம் ரூ.6000 முதல் ரூ.15,000 வரை செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

* மையத்தின் நம்பகத்தன்மை

நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான்கள் போலப் பல பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பல தேர்ச்சி மையங்கள் வெறும் வியாபார நோக்கங்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டவை. மாணவர் சேர்க்கை சமயத்தில் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் மிக ஜாக்கிரதையாக தண்ணீரில் எழுதியவை. எனவே, ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நன்றாகப் பரிசோதித்து பார்ப்பது அவசியம், அந்த நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசுவது கூடுதல் பயனளிக்கும். அந்த நிறுவனத்தின் முந்தைய ஆண்டுகளின் தேர்ச்சி விகிதங்கள் குறித்து விசாரிப்பதும் அவசியமானது. 

நீட் தேர்வு மையங்களைப் பொறுத்தவரை இந்தக் கையேடு ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. தனியார் நிறுவனங்களுக்கு நிகரான அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களும் தமிழகம் முழுவதும் உள்ளன. மாணவர்களின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

Vikatan