Published:Updated:

வானிலை அறிவிப்பு மட்டுமல்ல, வானிலை படிப்புகளும் சுவாரஸ்யம்தான் - வழிகாட்டும் வல்லுநர்#LetsLearn

பிரேம் குமார் எஸ்.கே.

காலநிலையை முன்னதாகவே கணிப்பது என்பது விஞ்ஞானம். சரியான நேரத்தில் முறையான தகவல்கள் மூலம் பெரும் பொருள்சேதம் மட்டுமல்லாது உயிர்ச் சேதமும் தவிர்க்கப்படும்.

வானிலை அறிவிப்பு மட்டுமல்ல, வானிலை படிப்புகளும் சுவாரஸ்யம்தான் - வழிகாட்டும் வல்லுநர்#LetsLearn
வானிலை அறிவிப்பு மட்டுமல்ல, வானிலை படிப்புகளும் சுவாரஸ்யம்தான் - வழிகாட்டும் வல்லுநர்#LetsLearn

``வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த இரண்டு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன மழையும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்... மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்”, ``அடுத்த சில நாள்கள் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிடக் கூடுதலாக இருக்கும்”, ``அனல் காற்று வீசும்”, ``புயல் கரையைக் கடக்கும்போது 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்” இப்படிப் பல்வேறு தகவல்களை நமக்கு அன்றாடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். செய்திகளில் இவர்கள் இடம்பெறவில்லை என்றாலும் தினம் தினம் விவசாயிகள், மீனவர்கள் எனப் பலருக்கு இவர்கள் அளிக்கும் தகவல்கள் முக்கியமானது. 

வானிலை அறிவிப்பு மட்டுமல்ல, வானிலை படிப்புகளும் சுவாரஸ்யம்தான் - வழிகாட்டும் வல்லுநர்#LetsLearn

காலநிலையை முன்னதாகவே கணிப்பது என்பது விஞ்ஞானம். சரியான நேரத்தில் முறையான தகவல்கள் மூலம் பெரும் பொருள்சேதம் மட்டுமல்லாது உயிர்ச் சேதமும் தவிர்க்கப்படும்.  இந்தப் பணியைச் செய்வதற்கு நாம் என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும்.

வானிலை ஆராய்ச்சி தொடர்பாக என்ன என்ன படிப்புகள் இருக்கிறது, எங்கு படிக்க வேண்டும், இந்தப் படிப்புகளுக்கான எதிர்காலம் எப்படி இருக்கும், வெளிநாடுகளில் இதுபோன்ற படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் இருக்கிறதா... இது போன்று பல கேள்விகளை, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசனிடம் முன்வைத்தோம். ``வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்ற விரும்பும்

வானிலை அறிவிப்பு மட்டுமல்ல, வானிலை படிப்புகளும் சுவாரஸ்யம்தான் - வழிகாட்டும் வல்லுநர்#LetsLearn

மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் எனப் பலருக்கு சந்தேகம் இருக்கும். இயற்பியல் படித்தாலே இந்தத் துறையில் வேலை கிடைக்கும். இயற்பியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கிறது. இந்தத் துறை சார்ந்து  நமது மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு வேண்டும். இயற்பியல் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் இத்துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்துத் தெரியவில்லை.  

தவிர, இதற்கென்று தனியாகப் படிப்பும் இருக்கிறது. Meterology என்னும் படிப்பு நமது அண்டை மாநிலமான கேரளாவில்கூட இருக்கிறது. இதைப் படித்தால் இத்துறையில் மட்டுமே வேலை கிடைக்கும். ஆனால், இயற்பியல் படிக்கும்போது இது மட்டுமல்லாது மற்ற சில வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். விவசாயம் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளுக்கு விவசாயம் சார்ந்த படிப்புகள் முக்கியம். அப்படிப்பட்ட பலரும் இங்கு பணியாற்றுகிறார்கள். ஹைட்ரோலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் இந்தத் துறையில் வேலை வாய்ப்பு  இருக்கிறது. இங்கு மட்டுமல்ல இந்தத்

வானிலை அறிவிப்பு மட்டுமல்ல, வானிலை படிப்புகளும் சுவாரஸ்யம்தான் - வழிகாட்டும் வல்லுநர்#LetsLearn

துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் வெளிநாட்டிலும் கிடைக்கிறது. இது தொடர்பாகவும் மாணவர்கள் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். 

படித்துப் பட்டம் பெற்ற பிறகு, இந்தத் துறையில் பணியாற்ற விரும்பினால், யு.பி.எஸ்.சி தேர்வு மூலம் இந்தப் பணிக்குச் சேரலாம். பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் இடங்கள் நிரப்பப்படும். இதில் தமிழக மாணவர்கள் குறைவான அளவிலே தேர்வாகிறார்கள். மற்ற மாநிலத்தைச் சேர்ந்த பலர் தேர்வாகி சென்னையில் பணியாற்றுகிறார்கள். வடமாநிலத்தைச் சேர்ந்த பலரும் பணியாற்றுகிறார்கள். தமிழக மாணவர்கள் அதிகம் தேர்வாகாதது குறித்து கவலையாக இருக்கும்.  தமிழக மாணவர்களும் முறையாகத் திட்டமிட்டுப் படித்தால் இந்தத் தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சி பெற்று பணி செய்யலாம்” என்கிறார் நம்பிக்கையுடன். 

Vikatan