Published:Updated:

``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா
``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா

"காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா வசதியில்லையே! படிச்சு முடிச்சு நல்ல வேலைக்குப் போகணும். குறிப்பா பேங்க் வேலைக்குப் போகணும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புளியமரத்தடி கொட்டகை, மெழுகுவத்தி துணை, கல்லூரி ஹாஸ்டலில் படிக்க வசதி இல்லாதது... என நாடோடி இன மாணவி கங்காவின் வாழ்க்கை வறுமை நிலையில் இருக்கிறது.

``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா

நாகர்கோவிலை அடுத்த வெள்ளிச்சந்தை புளியமூட்டில் கொட்டகை அமைத்து நாடோடிக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. ஓரிடத்தில் நிலையாக வசிக்காமல் ஊர் ஊராகச் செல்லும் நாடோடிக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு படிப்பு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையில் வெள்ளிச்சந்தையில் வசித்த இரண்டு நாடோடிக் குடும்பங்களில் உள்ள ஐந்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மதாஸ். அப்படிச் சேர்த்த பிள்ளைகளில் ஒருவர்தான் கங்கா. பி.எஸ்சி படிக்கிறார்.

``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா

அவர் தங்கியிருக்கும் கூடாரம் புளிய மரத்தடியில் இருக்கிறது. நான்கு அடியே உயரமுள்ள கூடாரம்தான் கங்காவின் வீடு. ``எங்க அப்பா சுரேஷும் அம்மா ஐயம்மாளும் காதலித்து கல்லியாணம் பண்ணிக்கிட்டாங்க. ஊர் ஊராகப் போய் குடை தைப்பது, செருப்பு தைப்பதுதான் அவங்க வேலை. அப்படி வெள்ளிச்சந்தை ஊர்ல கூடாரம் அமைச்சு தங்கியிருந்தப்ப அந்த ஊரோட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மதாஸ் என்னையும் என் அண்ணன் மற்றும் மூணு பிள்ளைங்களையும் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். மற்ற மூணு பிள்ளைங்க படிப்பைப் பாதியிலே விட்டுட்டாங்க. நானும் என் அண்ணன் முத்துசூர்யாவும் தொடர்ந்து படிச்சோம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நான் வெற்றிபெற்றேன், அண்ணன் ஃபெயிலாகிட்டான். அதன்பிறகு அவனும் படிப்பை பாதியில் நிறுத்திட்டான். நான் வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் ஏற்பாட்டின்பேரின் சிதறாலில் அன்பு இல்லத்தில் தங்கி 12-ம் வகுப்புவரை வரை படிச்சேன்'' என்றவரின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

''பத்தாம் வகுப்புத் தேர்விற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு என் அம்மா இறந்துவிட்டார். நான் ஒடிந்து போனேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலைகளுக்கிடையில் படித்து பாஸ் ஆன என்னால் 318 மதிப்பெண்தான் எடுக்க முடிஞ்சது.12-ம் வகுப்பில் 463 மார்க் கிடைத்தது. இப்போது நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பி.எஸ்சி படிக்கிறேன்.

``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா

கூடாரத்தில் லைட்டு இல்லாததுனால மெழுகுவத்தி வச்சுதான் படிப்பேன். மழை வந்தால் கூடாரம் ஒழுகும். அதனால கடைப் பக்கம் போய் படுப்போம். விடிந்ததும் 6 மணிக்குக் கடை திறக்க ஆள்கள் வருவார்கள். முதலில் அப்பாவை எழுப்புவார்கள். அதன்பின்பு, நாங்கள் எழுந்துகொள்வோம். அப்படி எழுப்புவது எனக்கு அவமானமாக இருக்கும். கூடாரத்துக்கு வந்து பல முறை அழுதிருக்கிறேன். அது போக, நான் பெரிய பொண்ணாயிட்டதுனால கடை முன்னாடி படுக்க சங்கடமா இருக்கும். இப்பலாம் போறதில்லை. இந்தக் கொட்டகையில் தங்கியிருந்துதான் காலேஜுக்குப் போறேன். என்னை காலேஜுல சேர்த்து விட்டதும் பத்மதாஸ் சாருதான்.

``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா

இந்தக் கொட்டகையில இருந்து வெளிச்சம் இல்லாம படிக்கிறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு. அதான் காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா வசதியில்லையே! படிச்சு முடிச்சு நல்ல வேலைக்குப் போகணும். குறிப்பா பேங்க் வேலைக்குப் போகணும். என் சமூக மக்கள் பேங்குக்கு வர்றப்ப நான் அவங்களுக்குப் பணம் கொடுக்கணும். அதுக்குதான் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறேன்'' என்று முடித்தார் கங்கா.

``பெரிய பொண்ணாகிட்டதுனால கடை வாசல்ல தூங்க முடியலை!'' - படிக்க ஏங்கும் நாடோடி சமூக மாணவி கங்கா

கங்காவை பள்ளியில் சேர்த்த பத்மதாஸ் பேசும்போது, ``எனது ஊர் வெள்ளிச்சந்தைப் பகுதியில் புளியமூட்டில் நாடோடி மக்கள் கூடாரம் அமைத்துத் தங்குவார்கள். படிக்கும் பருவம் வந்தாலும் அந்தக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள். ஒரே இடத்தில் தங்கினால்தான் படித்து நன்கு முன்னுக்கு வரமுடியும் என்று அந்தக் குழந்தைகளிடம் அறிவுறுத்தினேன். அந்த வார்த்தையை கங்கா தீவிரமாகப் பற்றிக்கொண்டாள். என்னால் முடிந்தவரை அவளுடைய கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறேன். ஆனால், விடுதி கட்டணத்தைச் செலுத்த இயலவில்லை. உதவி கிடைத்தால் கங்கா நிச்சயம் நன்கு முன்னேறுவாள்'' என்று தன்னம்பிக்கையோடு பேசி முடித்தார் பத்மதாஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு