Published:Updated:

இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 

இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 
News
இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 

இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இடம்பிடித்திருக்கும் தவறான தகவல்களால் இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். 

இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங் தொடங்கி நடந்துவருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த சில கல்வி ஆண்டுகளாக போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதனால் பெரும்பாலான  இன்ஜினீயரிங் கல்லூரிகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலைவாய்ப்பு கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் இன்ஜினீயரிங் கல்லூரியின் நிதிநிலைமை மோசமானதால் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. இதனால் விஜயகாந்த்தின் வீடு, கல்லூரிகளை ஏலத்தில் விடப்போவதாக வங்கி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதோடு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 1.74 லட்சம் இன்ஜினீயரிங் சீட்கள் உள்ளன. இந்தக் கல்வி ஆண்டில் பயில 1.03 லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வி ஆண்டுக்கான கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவில்லை. தமிழக தொழிற்நுட்ப கல்வி இயக்குநரகம் கவுன்சலிங்கை சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்திவருகிறது. 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, சமீபத்தில் 537 கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என அறிவித்தார். சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களின் சீட்களையும் குறைக்க நடவடிக்கை எடுத்தார். அதுதொடர்பான அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 92 கல்லூரிகளின் விவரங்களை ஏன் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என்று அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக் என்பவர் கேள்வி கேட்டதோடு துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார், இணைப்பு கல்லூரிகளின் இயக்குநர் மதுசூதனன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். அதற்கு பதிவாளர் குமார், விளக்கமும் அளித்தார். 

இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகையில், ``அண்ணா பல்கலைக்கழகம் இந்தக் கல்வி ஆண்டில் இன்ஜினீயரிங் கவுன்சலிங் நடத்தவில்லை என அறிவித்துவிட்டது. அதோடு கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் 92 கல்லூரிகளின் பெயர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அந்தக் கல்லூரிகளின் சீட் எண்ணிக்கைக்கு அருகில் சிறிய அளவில் நம்பர் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி 92 கல்லூரிகளின் விவரங்களை வெளிப்படையாகவே வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

கே.எம்.கார்த்திக் கூறுகையில், , ``துணைவேந்தர் சூரப்பா, கல்லூரிகளில் ஆய்வு நடத்தியபிறகு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக்கூறி 92 கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கைக்கான சீட்களைக் குறைத்துள்ளார். அது, எந்தெந்த கல்லூரிகள் என்று ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்டிருந்தோம். அதற்கு பல்கலைக்கழகம் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. ஆய்வு நடத்த அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விக்கும் மழுப்பலான பதிலளிக்கப்பட்டுள்ளது. கவுன்சலிங்கில் மாணவர்களுக்கு தேவையில்லாத குழப்பத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 92 கல்லூரிகளின் பட்டியலை வெளியிடாததால்தான் லஞ்ச ஒழிப்புத்

இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 

துறைக்கு நான் புகார் அனுப்பினேன். என் புகாரின் பேரில் முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கவுன்சலிங்கில் 92 கல்லூரிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்கெனவே 1.74 லட்சம் சீட்களுக்கு 1.03 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் தகுதியான கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படியிருந்தும் 92 கல்லூரிகளின் பட்டியலை கவுன்சலிங்கில் பங்கேற்கும் 500 கல்லூரிகளோடு இணைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. 92 கல்லூரிகளை நடத்துபவர்களின் பின்புலம்தான் இதற்கு காரணமாக இருக்கும்"  என்றார்.  

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் இயக்குநர் மதுசூதனனைத் தொடர்பு கொண்டபோது அவரும் பதிலளிக்கவில்லை. கவுன்சலிங் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தமிழக தொழிற்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரி ஒருவர், ``கவுன்சலிங்கில் மாணவர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாது. ஏனெனில் ஆய்வு நடத்தியபிறகு 92 கல்லூரிகளின் மாணவர்களின் சீட்கள் குறைக்கப்பட்ட பட்டியலைத்தான் கவுன்சலிங்கில் காண்பிக்கப்படும். இதனால், மாணவர்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது. 537 கல்லூரிகளின் பட்டியலுக்குள் 92 கல்லூரிகளை தனியாக எடுத்திருந்தால் மாணவர்கள் சுலபமாக கல்லூரிகளைத் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்" என்றார். 

இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்களே உஷார்! - 537 கல்லூரிகளுக்குள் அந்த 92 கல்லூரிகள் 

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை ஆய்வு செய்தபோது ராமநாதபுரத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி விவர பட்டியலில் கடந்த 2018-19-ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட சீட் 30 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட சீட் 45 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து சீட்கள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அப்படியிருக்கும்போது எப்படி 30 சீட்கள் 45 ஆனது என்று தெரியவில்லை. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கேட்டபோது தவறுதலாக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலட்சியமாக பதிலளித்தனர். 

இதுகுறித்து துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்புகொண்டபோது மீட்டிங்கில் இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகும் அவரைத் தொடர்புகொண்டபோது பதிலளிக்கவில்லை. துணைவேந்தர் சூரப்பாவின் விளக்கத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.