`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்!' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு

`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்!' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு
’நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்! சுட்டி விகடன் நடத்தும் 'நம் மாவட்டத்தை நாம் அறிவோம்' தேர்வில் பங்கேற்று, வெற்றி பெறுங்கள் மாணவர்களே!

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவுடன், சுட்டி விகடன் தனது 20-ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாடிவருகிறது. 20-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தின் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் இன்ஃபோ சிறப்பிதழை வெளியிட்டுவருகிறது. இந்த சிறப்பிதழ், பள்ளிகளின்மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு நுழைவுத் தேர்வுகளுக்கு முன்மாதிரியான OMR sheet மூலம் தேர்வு நடத்தி சான்றிதழும், பள்ளி மற்றும் மாணவர்களுக்கு கேடயமும் வழங்கப்படும். இதுவரை சேலம், தருமபுரி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி மற்றும் திருச்சியில் தேர்வு நடத்தப்பட்டு, ஒரு லட்சம் மாணவர்களுக்கும் மேல் ஆர்வமுடன் தேர்வு எழுதி பரிசுகளைப் பெற்றுள்ளனர்.
கல்வியில் முன்னோடி மாவட்டமான நம் விருதுநகர் மாவட்டத்தில், சுட்டி விகடனின் ’விருதுநகர் 200’ தேர்வு நடைபெற உள்ளது. இதற்கென நம்முடைய மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த விருதுநகர் 200 இன்ஃபோ புத்தகம் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களிடையே ’விருதுநகர் 200’ என்ற போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் போட்டியில், உங்கள் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இந்தத் தேர்வு, சொந்த மாவட்டம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பெருமைகள்குறித்து மாணவர்கள் தெரிந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும். போட்டியில் பங்குபெறும் பள்ளிகள்குறித்த தகவல்களை விகடன் குழும இதழ்களில் வெளியிட்டு பெருமைப்படுத்த உள்ளோம். இதன்மூலம், உங்கள் பள்ளிகுறித்த விவரங்கள், ஒரு கோடி விகடன் வாசகர்களுக்குச் சென்றடையும்.

ஓ.எம்.ஆர். (OMR sheet) விடைத்தாளில் போட்டிகள் நடத்தப்படுவதால், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான ஒரு பயிற்சியாக இருக்கும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசுகளும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சுட்டி விகடன் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும், ரூ.25 மதிப்புள்ள சுட்டி விகடன் புத்தகமும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விருதுநகரின் 200 முக்கிய சிறப்புகள் குறித்த ரூ.100 மதிப்பிலான இன்ஃபோ புத்தகமும் வழங்கப்படும். இவ்வளவு சிறப்புமிக்க இந்த தேர்வுக்கு, பதிவுக் கட்டணமாக ரூ.40 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்தத் தேர்வை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி முதல் உங்கள் பள்ளிகளுக்கு விருதுநகர் இன்ஃபோ புக் வழங்கப்படும். ஜூலை 10-ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளிகளின் வசதிக்கேற்ப, அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கேயே தேர்வை நடத்திக் கொள்ளலாம். தேர்வு நடந்த 3 நாள்களுக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜூலை 20-ஆம் தேதி நடக்கும் பரிசளிப்பு விழாவில், மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசும் கேடயமும், பள்ளிகளுக்கு நினைவுப் பரிசும் வழங்க உள்ளனர். எனவே, அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் இந்தத் தேர்வு மற்றும் இதன் பயன்கள் குறித்து தங்கள் மாணவர்களிடம் தெரிவித்து, மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு மற்றும் பிற விவரங்களுக்கு 9952930666, 9789977837 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.