Published:Updated:

யார் இந்த கருணாமூர்த்தி? - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்ட பின்னணி  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
யார் இந்த கருணாமூர்த்தி?  - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்ட பின்னணி   
யார் இந்த கருணாமூர்த்தி? - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்ட பின்னணி  

யார் இந்த கருணாமூர்த்தி? - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்ட பின்னணி  

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார், கருணாமூர்த்தி. இவரை நியமிப்பதற்கு முன், நாகராஜன் பதிவாளராக நியமிக்கப்பட்டதாக பல்கலைக்கழக வளாகத்தில் பரவிய தகவலையடுத்து, அவருக்கு பேராசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

யார் இந்த கருணாமூர்த்தி?  - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்ட பின்னணி   

அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) இருந்த கணேசனை துணைவேந்தர் சூரப்பா மாற்றினார். அவருக்குப் பதிலாக குமார் என்பவர் பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இந்த மாதத்துடன் குமார் ஓய்வுபெறுவதையொட்டி பதிவாளர் பதவியைப் பெறத் தகுதியான பேராசிரியர்கள் முயற்சி செய்தனர். பதிவாளர் பதவிக்கான ரேஸில் எம்.ஐ.டி-யில் பணியாற்றும் பேராசிரியர் ஆனந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், பட்நாயக், கருணாமூர்த்தி, ரேமென்ட் உதித்ராஜ், நாகராஜ் தற்போதைய பதிவாளர் குமார் (பணிநீட்டிப்பு மூலம்) ஆகியோர் இடையே கடும்போட்டி நிலவியது. இந்தச் சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், அடுத்த பதிவாளர் குறித்து எந்தவித விவாதமும் நடக்கவில்லை என்ற தகவல் வெளியானது. 

இந்த நிலையில், பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் நாகராஜ் நியமிக்கப்பட்டதாக வந்த தகவல், காட்டுத் தீ போல பல்கலைக்கழக வளாகத்தில் பரவியது. அதைத் தொடர்ந்து, நாகராஜுக்கு பேராசிரியர்கள் பலர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த கருணாமூர்த்தியை துணைவேந்தர் சூரப்பா சந்தித்தார். அவரைப் பதிவாளராக (பொறுப்பு) நியமித்துள்ளதாக துணைவேந்தர் சூரப்பா அறிவித்தார். பதிவாளராக கருணாமூர்த்தி எப்படித் தேர்வுசெய்யப்பட்டார் என்பதை பல்கலைக்கழகத்தில் விசாரித்தோம்.

யார் இந்த கருணாமூர்த்தி?  - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்ட பின்னணி   

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ``கருணாமூர்த்தி ஓய்வுபெற இன்னும் 21 மாதங்கள் உள்ளன. அதனால்தான் அவருக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கருணாமூர்த்தி, சிண்டிகேட் அட்வைஸராக இருந்தவர். மேலும், மெக்கானிக்கல்,உற்பத்தி, இன்ஜினீயரிங் டிசைன் உள்ளிட்ட துறைகளின் சேர்மன் பதவியையும் வகித்தவர்.

 நாகராஜனைப் பதிவாளராக நியமிக்க காயை நகர்த்திய ஒரு  டீம், உயர்கல்வித்துறை அமைச்சரகத்தில் தவம் கிடந்தனர். அப்போது, நாகராஜனைப் பதிவாளராக நியமிப்பதை சிலர் விரும்பவில்லை.  அதனால்தான், கருணாமூர்த்தியை நியமிக்க எல்லோரும் சம்மதித்தனர். கருணாமூர்த்தியை நியமிப்பதற்கு முன், ஆனந்தகுமாரைத்தான் பதிவாளராக நியமிக்க முடிவுசெய்யப்பட்டிருந்தது. 

 கருணாமூர்த்தியைப் பொறுத்தவரை பல்கலைக்கழகத்தில் சீனியர். மேலும், உயர் பதவிகளை வகித்தவர். இதனால்தான் அவருக்கு பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கருணாமூர்த்தியைப் பதிவாளர் இருக்கையில் அமரவைக்க ஒரு டீம், கடும் முயற்சி செய்துள்ளது. முதலில் அமைச்சர் தரப்பை சம்மதிக்கவைத்த அந்த டீம், அடுத்து, துணைவேந்தர் தரப்பையும் ஆளுநர் அலுவலகத்தையும் சம்மதிக்க வைத்துள்ளது. அதன்பிறகுதான், கருணாமூர்த்தி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்றனர். 

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சீனியர் பேராசிரியர் ஒருவர் நம்மிடம், ``அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. துணைவேந்தர் பதவிக்கான பட்டியலில் முன்னாள் துணைவேந்தர்கள் ராஜாராம்,காளிராஜன், காளியப்பன் மற்றும் யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ், கருணாமூர்த்தி, கணேசன் (முன்னாள் பதிவாளர்), ரமேஷ், சூரப்பா ஆகியோரின் பெயர்கள் இடம்பிடித்திருந்தன. துணைவேந்தர் பட்டியலில் இருந்த கருணாமூர்த்தி, தற்போது பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார். 

யார் இந்த கருணாமூர்த்தி?  - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்ட பின்னணி   

பதிவாளர் பதவிக்கான போட்டியில் இருந்த ஆனந்தகுமாருக்கும் நாகராஜனுக்கும் பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவி கொடுக்க துணைவேந்தர் சூரப்பா தரப்பு முடிவுசெய்து, அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது. இதற்கிடையில், விநாயகா பிரதர்ஸ் டீமைச் சேர்ந்தவர்கள்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவிகள் இருந்துவருகின்றனர். இதற்கு ஒரு தரப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. புதிய பதிவாளராக நியமிக்கப்பட்ட கருணாமூர்த்தி, பல்கலைக்கழகத்தில் நிலவும் கோஷ்டி பூசல்களைச் சமாளிப்பதுடன் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தச் சமயத்தில் பல சவால்களைச் சமாளித்து, பதிவாளராக கருணாமூர்த்தியை துணைவேந்தர் சூரப்பா துணிச்சலுடன் அறிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 உற்பத்தித் துறையைச் சேர்ந்த முருகனின் பெயரைக் கொண்ட பேராசிரியர் மீது அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தது தொடர்பான  விஜிலென்ஸ் விசாரணை உள்ளது. இதன் காரணமாக அவர், பதிவாளராக நியமிக்கப்படவில்லை. மேலும், அந்தத் துறையைச் சேர்ந்த பலர் முருகனின் பெயரைக்கொண்ட பேராசிரியர் மீது துணைவேந்தர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதோடு, பதிவாளராக இருந்த குமாரைத் தேர்வு முறைகேடுகுறித்து விசாரிக்க கமிட்டி பரிந்துரைசெய்திருந்தது. அதன்அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு