Published:Updated:

ஒருதலை காதல்: 4 பேரை குத்திவிட்டு தப்பித்த இளைஞன்!

விகடன் விமர்சனக்குழு
ஒருதலை காதல்: 4 பேரை குத்திவிட்டு தப்பித்த இளைஞன்!
ஒருதலை காதல்: 4 பேரை குத்திவிட்டு தப்பித்த இளைஞன்!
ஒருதலை காதல்: 4 பேரை குத்திவிட்டு தப்பித்த இளைஞன்!

காரைக்குடி: காரைக்குடியில் ஒருதலை காதலால் 4 பேரை கத்தியால் குத்திவிட்டு கல்லூரி மாணவன் ஒருவன் தப்பி ஓடி இருக்கிறான். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியருகேயுள்ள பள்ளத்தூரில் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கலை கல்லூரியில் முதல்வரக இருப்பவர் ராமுத்தாய். இவர் தனது கணவர் வெள்ளைச்சாமி, மகள்கள் கீர்த்தனா, அகிலாவுடன் கல்லூரிக்கு அருகிலிருக்கும் காமராஜர் தெருவில் வசித்து வருகிறார்கள்.

ஒருதலை காதல்: 4 பேரை குத்திவிட்டு தப்பித்த இளைஞன்!

மூத்த மகள் கீர்த்தனா திண்டுக்கல்லில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சிறிய மகள் அகிலா சமீபத்தில்தான் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு சென்றுவிட்டு வந்துள்ளார். நேற்று இரவு அவர்கள் வீட்டிலிருந்து பயங்கரமான அலறல் சத்தம் கேட்க, அருகில் குடியிருப்பவர்கள் ஓடிப்போய் பார்த்திருக்கிறார்கள். உள்ளே நான்கு பேரும் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடிக் கிடந்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விரைந்து வந்து நான்கு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருதலை காதல்: 4 பேரை குத்திவிட்டு தப்பித்த இளைஞன்!

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூத்த பெண் கீர்த்தனாவை, கல்லூரியில் ஒன்றாக படிக்கும் நாங்குநேரியை சேர்ந்த மகேஷ்குமார் என்ற மாணவன் ஒருதலையாக காதலித்திருக்கிறான். பலமுறை வற்புறுத்தியும் அவனுடைய காதலை கீர்த்தனா ஏற்றுக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில் விடுமுறைக்கு கீர்த்தனா ஊருக்கு வந்திருக்கிறார்.

ஒருதலை காதல்: 4 பேரை குத்திவிட்டு தப்பித்த இளைஞன்!

தனக்கு கீர்த்தனாவை திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அவளது பெற்றோரிடமே கேட்டிருக்கிறான் மகேஷ். ஆனால், கீர்த்தனாவின் பெற்றோர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

##~~##
கடைசியில் தனக்கு கீர்த்தனா கிடைக்க மாட்டாள் என்று தெரிந்ததும், வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டி.வி. சத்தத்தை கூட்டி வைத்துவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முதலில் கீர்த்தனாவின் அப்பா வெள்ளைச்சாமியை குத்தி இருக்கிறான். அதை தடுக்க வந்தவர்களையும், அடுத்தடுத்து வரிசையாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருப்பது தெரிந்திருக்கிறது. தற்போது போலீசார் மகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அமைதி தவழும் பள்ளத்தூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

செய்தி, படங்கள்: சாய் தர்மராஜ்