Published:Updated:

தரமான கல்வி... பிரகாசமான எதிர்காலம்!

தரமான கல்வி... பிரகாசமான எதிர்காலம்!

தரமான கல்வி... பிரகாசமான எதிர்காலம்!

தரமான கல்வி... பிரகாசமான எதிர்காலம்!

Published:Updated:
##~##

'100 சதவிகிதத் தேர்ச்சி. பாடங்கள் தவிர கோச்சிங் வகுப்புகள் உண்டு!’  என்று  தனியார் பள்ளி, கல்லூரிகள் கூவிக் கூவி அழைத்தாலும் தரமான, அனைவருக்குமானக் கல்வி என்பது ஏழைகளுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் இன்றுவரை எட்டாக்கனியாகவே  உள்ளது. அப்படிப்பட்ட ஏழை மாணவர்களுக்குத் தரமானக் கல்வி கிடைக்க ஓர் அமைப்பு  உதவி  வருகிறது. அந்த அமைப்புதான்... 'யுரேகா கல்வி இயக்கம்’. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழகக் கிராமங்களைத் தத்தெடுத்து, கல்வி அளித்துவரும் அந்த இயக்கத்தின் செயலாளர் பாலாஜி சம்பத்தை, அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தேன்.

 ''15 வருஷங்களுக்கு முன்னாடி என் ஃப்ரெண்ட்ஸ் சிலருடன் சேர்ந்து இந்த இயக்கத்தை ஆரம்பிச் சேன்.  சென்னை ஐ.ஐ.டி-யில் வேலைப் பார்த்து கிட்டே இயக்கத்தை நடத்திட்டு இருந்தோம். அப்போ, 'கிராமப்புற மாணவர்களோட கல்வி நிலை எப்படி இருக்கு? அவங்களோட கல்வித் தரம் உயர என்னென்ன மாற்று ஏற்பாடுகள் பண்ணணும்?’னு ஒரு சர்வே எடுத்தோம். ஆயிரம் கிராமங்களுக்கு மேல சர்வே எடுத்தபோது, 'ஐந் தாம் வகுப்புப் படிக்கிற மாணவர்களுக்குக் கூட் டல், கழித்தல் கணக்குகள் சரியாத் தெரியலை; ஆங்கிலம் தெரியலை; அதைப் பற்றி பெற்றோர், ஆசிரியர்கள் யாரும் கண்டுக்கிறது இல்லை’னு ஏகப்பட்ட விஷயங்களை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தோம்.  

தரமான கல்வி... பிரகாசமான எதிர்காலம்!

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சித் திட்டத்தால் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு  வந்துடுறாங்க. அதனால பெத்தவங்களும் 'நம்மப் பசங்க நல்லா படிக்கிறாங்க போல’னு அமைதியா இருந்துடுறாங்க. இதை விட முக்கிய மான விஷயம் அவங்க கல்வியை சீரியஸான

தரமான கல்வி... பிரகாசமான எதிர்காலம்!

விஷயமா எடுத்துக்கிறது இல்லை. 'எங்க பசங்க எப்படிப் படிக்கிறாங்க?’னு ஸ்கூல்ல போய் விசாரிக்கிறதும் இல்லை. இந்தச் சூழலை மாத்த ணும்னு முடிவு பண்ணினோம்'' என்ற பாலாஜி சம்பத் மேலும் தொடர்ந்தார்.

''ஸ்கூலுக்குப் போய், 'ஏன் நீங்க மாணவர்களுக்கு சரியாப் பாடம் சொல்லித் தர்றது இல்லை?’னு ஆசிரியர்கள்கிட்ட கேட்டால், 'இதை எல்லாம் கேட்க நீங்க யார்?’னு எங்களைக் கேட்பாங்கனு  நேரடியாப் பெற்றோர்களைச் சந்திச்சோம். 'இதுதான் உங்க பசங்களோட கல்வி நிலை’னு எடுத்துச் சொன்னோம். 'ஐயையோ’னு பதறின பெற்றவர்கள், 'இதுதான் நீங்க சொல்லித் தர்ற லட்சணமா?’னு ஆசிரியர் களைக் கேள்வியாலத் துளைக்க ஆரம்பிச்சுட் டாங்க'' என்றவரிடம், ''உங்க சர்வேயில் எந்த மாதிரியானக் கேள்விகள் இடம்பெற்றன?'' என்று கேட்டோம்.  

''சில அடிப்படையானக் கேள்விகள் கொண்டப் பேப்பரை மாணவர்கள்கிட்டக் கொடுத்து நிரப்பச் சொன்னோம். அதை அவங்க எந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு நிரப்புறாங்கங்கிறதைப் பொறுத்துதான் அவங்களோடக் கல்வித் தரத்தை நிர்ணயிச்சோம். பிறகு, சம்பந்தப்பட்ட கிராமத்தோடப் பஞ்சாயத்துத் தலைவரை சந்திச்சுப் பேசினோம். அவர் மூலமாக மாணவர்களோடப் பெற்றோர்களை வரவைச்சுப் பிரச்னையை எடுத்துச் சொல்லி, அதற்கான தீர்வை யும் சொன்னோம். இப்பல்லாம் நாங்க சர்வே எடுத்த கிராமத்துப் பெற்றோர்கள் தங்களோடப் பிள்ளைகள் படிக்கிற ஸ்கூலுக்கு அடிக்கடி போய், 'பசங்க எப்படிப் படிக்கிறாங்க?’, 'ஏன் சரியாப் படிக்கிறது இல்லை?’னு கேள்வி கேக்கு றாங்க. இதனால ஆசிரியர்களும் தங்களுக்கான வேலைகளை மிகச் சிறப்பாச் செஞ்சுட்டு வர்றாங்க.  

முதல்கட்டமா திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மாணவர்களோட கல்விக்கு உதவி செய்றோம். இதுதவிர, கடந்த ஆறு வருஷமா 10 மற்றும் 12-ம் வகுப்பை முடிச்சிட்டு மேற்கொண்டுப் படிக்க முடியாத மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொண்டுப் படிப்பதற்கான ஃபீஸ் கட்டுறோம்.  இதேபோல எங்க பப்ளிகேஷன் மூலமா குறைஞ்ச விலைக்குப் புத்தகங்களை அச்சிட்டு ஏழை மாணவர்களுக்குக் கொடுக்கிறோம்.  மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் 'சென்னை ஸ்மைல்ஸ்’ங்கிற  டியூஷன் சென்டர் ஆரம்பிச்சு, அந்தப் பகுதியில உள்ள ஏழை மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறோம். அந்த டியூஷன் சென் டர்ல ரெண்டு வாலண்டியர்கள் ரெகுல ராகவும் விடுமுறை நாட்கள்ல மத்த வாலண்டியர்களும் வந்து வகுப்பு நடத்துறாங்க.

எங்களோட சேவையைக் கேள்விப்பட்டு ஏகப்பட்ட நிறுவனங்கள் உதவி செய்றாங்க. சமீபத்தில் கூட ஃபோர்டு கார் கம்பெனி நிதி உதவி செஞ்சாங்க. குழந்தைகளுக்குத் தரமான கல்வியை மட்டும் கொடுத்துட்டாப் போதும், அவங்க எதிர்காலத்தை அவங்களேப் பார்த்துப் பாங்க. இதைத்தான் நாங்க சந்திக்கிற ஒவ் வொருத்தர்கிட்டேயும் சொல்லிட்டு வர் றோம்!'' என்று முடித்தார் பாலாஜி சம்பத்!

தரமான கல்வி... பிரகாசமான எதிர்காலம்!

- சா.வடிவரசு

படம்: க.கோ.ஆனந்த்