Published:Updated:

யுஜிசி நெட் தேர்வு: தமிழகத்தில் 45,662 பேர் எழுதினர்!

விகடன் விமர்சனக்குழு
யுஜிசி நெட் தேர்வு: தமிழகத்தில் 45,662 பேர் எழுதினர்!
யுஜிசி நெட் தேர்வு: தமிழகத்தில் 45,662 பேர் எழுதினர்!
யுஜிசி நெட் தேர்வு: தமிழகத்தில் 45,662 பேர் எழுதினர்!

சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வை தமிழகத்தில் 45,662 பேர் எழுதினர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, உள்ளிட்ட மொழிப்பாடங்கள், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட கலைத்துறை பாடப்பிரிவுகளுக்கான தேர்வில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, சென்னையில் 12 மையங்களில் 14,382 பேர் எழுதினர். கோவையில் 9 மையங்களில் 9,858 பேரும், திருச்சியில் 10 மையங்களில் 11,122 பேரும் தேர்வு எழுதினர். இதேபோல், மதுரையிலும் 16 மையங்களில் 10,300 பேர் நெட் தேர்வை எழுதினர்.

##~~##
யூஜிசி நெட் தேர்வு காலையில் முதல் இரண்டு தாள்களும் மற்றும் பிற்பகல் ஒரு தாள் என மூன்று தாள்களாக நடைபெற்று வருகிறது.
காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை முதல் தாளும், 10.45 முதல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது. பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணி வரை மூன்றாம் தாள் தேர்வு நடைபெறுகிறது.