Published:Updated:

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகைகள் கேட்ட மனுக்கள் தள்ளுபடி!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகைகள் கேட்ட அனைத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பழனிமுத்து, கருப்பையா, ரமேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், தேசிய ஆசிரியர் கல்வி வாரிய விதிகளின்படி மதிப்பெண்ணில் சலுகை கோரியும், பிற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் சலுகை வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

##~~##
இந்த மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.