Published:Updated:

புதிய கல்வி முறை FA -வுக்கு ஜே !

புதிய கல்வி முறை FA -வுக்கு ஜே !

புதிய கல்வி முறை FA -வுக்கு ஜே !

புதிய கல்வி முறை FA -வுக்கு ஜே !

Published:Updated:
##~##

'கண்டதைப் படிக்கத் துடிக்காமல், கற்றவர் போல் நிதம் நடிக்காமல்’ என்று மனப்பாடத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துப் படித்த காலம் மலையேறப்போகிறது. மாணவர்களை வாட்டிய 'மனப்பாடம்’ என்னும் பூச்சாண்டிக்கு டாட்டா காட்டத் தயாராகிவிட்டது தமிழ்நாடு கல்வித் துறை. அதற்கான அசத்தலான தொடக்கம்தான் சி.சி.இ. அதாவது, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation).

கதை எழுதுவது, வகுப்பில் நண்பர்களுடன் விவாதிப்பது, புகைப்படங்களை ஒட்டி ஆல்பம் தயாரிப்பது, புதுப் புதுக் கருவிகளை உருவாக்குவது... என இதுவரை வகுப்பறையில் எவற்றுக்கு எல்லாம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தனவோ, இனி அவற்றை மாணவர்கள் அதிகாரபூர்வமாகவே செய்யலாம். 'அப்போ படிப்பு?’ என்று நீங்கள் கேட்கலாம்.

புதிய கல்வி முறை FA -வுக்கு ஜே !

இதுவும் படிப்புதான். இப்படிப்பட்ட மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த உதவும் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். மீதம் உள்ள 60 மதிப்பெண்களுக்கு வழக்கமான முறையில் தேர்வு நடைபெறும். இவைகூட மதிப்பெண்களாக இல்லாமல், ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, இ1 மற்றும் இ 2 ஆகிய ஒன்பது கிரேடுகளாக வழங்குகிறார்கள். தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த முறையைச் செயல்படுத்தத் துவங்கி உள்ளது.

 பொழுதுபோக்காக ஆர்வத்துடன் செய்து கொண்டு இருந்தோமே... அதற்கு எல்லாம் இப்போது மதிப்பெண்கள் உண்டு என்றால், ''ஸ்கூல் போறதே ஜாலியா இருக்கு சார்'' என்று மகிழ்கிறார்கள் மாணவர்கள்.  இந்தப் புதிய முறையில் முக்கியமானது எஃப்.ஏ. எனப்படும் திஷீக்ஷீனீணீtவீஸ்மீ கிssமீssனீமீஸீt. அதாவது, வகுப்பில் ஒவ்வொரு மாணவரின் திறமையையும் தனித்தனியே கண்டறிந்து, அவற்றை ஆசிரியர்கள் மேம்படுத்துவதற்குத் துணைபுரிவது. இப்படி பல்வேறு அறிவியல்பூர்வமான அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படும் இந்தக் கல்விமுறை நம் பள்ளிகளில் எப்படி இயங்குகிறது? விசாரித்தபோது கிடைத்தவை எல்லாமே ஆச்சர்யச் செய்திகள்.