Published:Updated:

பாதி என்னிடம் மீதி உன்னிடம் !

பாதி என்னிடம் மீதி உன்னிடம் !

பாதி என்னிடம் மீதி உன்னிடம் !

பாதி என்னிடம் மீதி உன்னிடம் !

Published:Updated:
##~##

காடாளுமன்ற கோடைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அமைச்சர்கள், உறுப்பினர்கள் இடையே கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. சபாநாயகர் ராமநாத யானையார் மணி அடித்து, ''சைலன்ஸ்... அவைக்குக் குந்தகம் விளைவிக்காமல் அமைதியாக இருங்கள். ஒவ்வொரு பிரச்னையையும் பார்க்கத்தான் இந்த மன்றம் கூடி இருக்கிறது'' என்று முழங்கினார்.

எதிர்க் கட்சித் தலைவர் புலி அண்ணன் பூபாலன், ஒரு பிரச்னையை முன்வைத்துப் பேசத் தொடங்கினார். ''மனிதர்கள் செய்கின்ற அட்டகாசங்களால் நம் காடுகள் அழிந்துகொண்டு இருக்கிறது. அதில் எங்கள் இனம்தான் வேகமாகக் குறைந்துகொண்டு வருகிறது. 'சேவ் டைகர்’ மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.''

''புல், பூண்டுகூட சரியாகக் கிடைக்காமல் வாடுகிறோம். வெயில் அதிகமாகிவிட்டது. மழையே பெய்வது இல்லை. எங்களுக்கு உணவு கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. எனவே, எங்கள் வாழ்வாதாரப் பிரச்னைக்குத்  தீர்வு சொல்ல வேண்டும்'' என்று முயலார் முன்னேற்றக் கழகத் தலைவர் முருகேசன் கோரிக்கை விடுத்தார்.

பாதி என்னிடம் மீதி உன்னிடம் !

அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் நாராயண நரியார், ''உங்களுக்கு மட்டுமா? எல்லோருக்குமே பிரச்னைதான். இதற்கு முக்கியக் காரணம், புவி வெப்பம் அடைதல், காலநிலை மாற்றங்கள். மனிதர்கள் தங்கள் தேவைக்காகக் காடுகளை அழித்துக்கொண்டு வருகிறார்கள். இந்தப் பிரச்னையைப் போர்க்கால அடிப்படையில் அணுக வேண்டும். அதற்குப் பிரதமர் மன்னார் சிங்கம் சில யோசனைகளை இந்தக் காடாளுமன்றத்தில் முன்வைப்பார்'' என்றதும் மன்றத்தில் அமைதி.

பிரதமர் மன்னார் சிங்கம் குரலை உயர்த்திப் பேசத் தொடங்கினார். ''மதிப்புமிக்க காடாளுமன்ற உறுப்பினர்களே... நீங்கள் கூறிய பிரச்னைகளுக்கு என்னிடம் மூன்று யோசனைகள் இருக்கின்றன. ஒன்று...''

பாதி என்னிடம் மீதி உன்னிடம் !

மாணவர்களுக்கு: இந்தப் பகுதியைத் தமிழ் ஆசிரியரிடம் கொடுத்து, உன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மீதிக் கதையை எழுத அல்லது சொல்லப் பரிந்துரை செய். அதில் நீயும் கலந்துகொள்.

ஆசிரியர்களுக்கு: இந்தக் கதையை வகுப்பில் சொல்லி, மீதிக் கதையைத் தங்கள் கற்பனைக்கு ஏற்ப மாணவர்களைக் கூறச் சொல்லி அதனை மதிப்பீடு செய்யலாம்.