Published:Updated:

Word Ladder

Word Ladder

Word Ladder

Word Ladder

Published:Updated:
##~##

ஒரு குறிப்பிட்ட மையப்பொருளை எடுத்துக்கொண்டு, அது தொடர்பான வார்த்தைகளைச் சட்டென நினைவுகூர்ந்து விரைவாக எழுதி முடிப்பதுதான் 'வார்த்தை ஏணி’ விளையாட்டு. வார்த்தைகளால் நிரப்பப்படும் இந்த ஏணியில் விரைவாக ஏறுபவர்களே வெற்றியாளர்கள். இதை வகுப்பில் குழுக்களாக விளையாடுவதே சிறந்தது.

உதாரணம்: மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு உள்ளதுபோல கரும்பலகையில் 10-க்கும் மேற்பட்ட படிகள்கொண்ட இரண்டு ஏணிகளை வரைய வேண்டும்.

வகுப்பில் உள்ள மாணவர்களை 'ஏ’, 'பி’ என இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அவர்களை வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நிற்கவைத் துக்கொள்ளலாம்.

ஆசிரியர் தேர்ந்தெடுத்த தலைப்பு School என்றால், பள்ளி உடன் தொடர்புடைய வார்த்தைகளை ஏணியின் ஒவ்வொரு படியிலும் கீழ் இருந்து மேலாக நிரப்ப வேண்டும்.  

Word Ladder

இந்தப் போட்டிக்கான நேரம் தொடங்கியவுடன், ஒவ்வொரு மாணவனும் தலைப்புடன் தொடர்புடைய ஒவ்வொரு வார்த்தையையும் ஏணிப் படியில் எழுதிவிட்டு, பின்னால் போய் நிற்க வேண்டும். எந்தக் குழு முதலில் முடிக்கிறதோ, அதுவே வெற்றிபெற்ற குழு என்று அறிவிக்க வேண்டும்.

வார்த்தை ஏணி விளையாட்டுக்கு ஏற்ற தலைப்புகள் சில:

House, Animal, Bird, Leader, Game, India, Parliament, Entertainment, Olympics, Tamil Nadu,

ஆசிரியர்களுக்கு: பாடம் தொடர்பான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, இந்த விளையாட்டை நடைமுறைப்படுத்தலாம். மாணவர்களின் பங்களிப்புக்கு ஏற்றபடி மதிப்பீடு செய்யலாம்.  

- தி.சாந்தி, முதுநிலை விரிவுரையாளர்.