Published:Updated:

தமிழகத்தைத் தாக்கிய 'தானே’!

தமிழகத்தைத் தாக்கிய 'தானே’!

தமிழகத்தைத் தாக்கிய 'தானே’!

தமிழகத்தைத் தாக்கிய 'தானே’!

Published:Updated:
##~##

கடந்த ஆண்டு டிசம்பர் 25-ல் இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் 'தானே’ புயல் உருவானது. இதைக் கூட்டுப்புயல் எச்சரிக்கை மையம், மிகவும் சக்தி வாய்ந்த புயல்களுக்குத் தரப்படும் 06B என்கிற குறியீட்டின் மூலம் குறித்தது.

'தானே’ என்கிற பெயர் மியான்மர் நாட்டினால் தரப்பட்டது. இதற்கு, பர்மிய மொழியில் 'நிலப் பிரபு’ என்று பொருள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் புயலின் மூலம், இந்தோனேசியா அருகில் உள்ள மேடான் என்கிற இடத்தில் இருந்து துவங்கியது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக உருவான இந்தப் புயல், படிப்படியாக வலுவடைந்தது.

புயல் கரையைக் கடந்தபோது, 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த வேகத்தில் காற்று வீசிய நேரம் மூன்றே நிமிடங்கள்!

தமிழகத்தைத் தாக்கிய 'தானே’!

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தியது.

 புயல் படிப்படியாக வலுவடைந்து, கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இடையே டிசம்பர் 31-ல் கரையைக் கடந்தது.

தானே புயலால் பல்வேறு மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தார்கள். குறிப்பாக கடலூர் மாவட்ட மக்கள், முந்திரி மற்றும் பலா மரங்களை முற்றாக இழந்து நிராதரவாக நின்றார்கள்.  

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், பெரு மரங்களும், விவசாய நிலங்களும் நீரில் முற்றிலும் மூழ்கின.  

தமிழகத்தைத் தாக்கிய 'தானே’!

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தமிழக அரசு ரூ.150 கோடி நிதி உதவி அறிவித்தது.  

எண்ணற்ற மக்களிடம் இருந்து பணம், உணவுப் பொருட்கள் போன்ற உதவிகள் குவிந்தன. கடந்த 40 ஆண்டுகளில், சுனாமிக்கு இணையாக மிகப்பெரும் அழிவை உண்டாக்கிய புயல் என நிபுணர்கள் 'தானே’ புயலைக் குறிப்பிடுகிறார்கள்.

இங்கே தரப்பட்டு இருக்கும் 'தானே’ புயல் குறித்த குறிப்புகளைக் கொண்டு விரிவான கட்டுரை ஒன்றைத் தயாரித்து, உரிய படங்களுடன் ஆசிரியரிடம் அளிக்கலாம்.

- பூ.கொ.சரவணன்
படங்கள்: ஜே.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism