Published:Updated:

அணு மின் நிலையம்...நன்மையா? தீமையா ?

அணு மின் நிலையம்...நன்மையா? தீமையா ?

அணு மின் நிலையம்...நன்மையா? தீமையா ?

அணு மின் நிலையம்...நன்மையா? தீமையா ?

Published:Updated:

அணு மின் நிலையத்தினால் நன்மையா, தீமையா? என்ற தலைப்பின் கீழ் மாணவர்கள் வகுப்பில் விவாதம் மேற்கொள்ள உதவியாக, இரு தரப்பு வாதங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டு உள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் விவாதம் செய்யலாம்.

அணு மின் நிலையத்தின் நன்மைகள்:

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகைகொண்ட ஒரு நாட்டில் அதிகரிக்கும் மின் தேவையைச் சமாளிக்க அணு மின் நிலையங்களால் மட்டுமே முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்படி அமைக்கப்படுகிறது.  

ஓசோன் ஓட்டை, அமில மழை, புவி வெப்பமயமாதல் போன்ற சுற்றுச்சூழல் அபாயங்கள் இல்லை.

நிறுவுவதற்கான செலவு மட்டுமே அதிகம். பராமரிப்புச் செலவு நிலையானது.

அமெரிக்கா 50 வருடங்களுக்கும் மேலாக நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட, பல தேவைகளுக்கும் வெற்றிகரமாக அணு சக்தியைப் பயன்படுத்திவருகிறது. ஃபிரான்ஸ் நாட்டின் மின் தேவையில் 78 சதவீதத்தை அணு மின் நிலையங்கள்தான் நிறைவேற்றுகின்றன.

அணு மின் நிலையம்...நன்மையா? தீமையா ?

தமிழகத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்படுகிறது.

அணு மின் உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் தாது நமது பூமியில் ஏராளமாகக் கிடைக்கிறது.

அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்று, நம் இந்தியா வல்லரசாக அணு மின் நிலையங்கள் உதவும்.

அணு மின் நிலையத்தின் தீமைகள்:

அணு மின்சாரம் மலிவானது என்றபோதும் அணு மின் நிலையங்களைக் கட்டமைக்க அதிகம் செலவாகும்.

சுனாமி, பூகம்பம், போர் போன்ற அபாயச் சூழ்நிலைகளில் மிகவும் விபரீதமான விளைவுகள் நேரிடும்.

அணு மின் உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் நீர், மீண்டும் கடலிலேயே

அணு மின் நிலையம்...நன்மையா? தீமையா ?

சேர்க்கப்படுவதால், மீன் உள்ளிட்ட கடல் வளம் பாதிப்புக்கு உள்ளாகிறது. அணு உலையில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் அங்கு பணிபுரிபவர்களுக்கும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கும் புற்றுநோய் அபாயத்தைத் தரக் கூடியது.

அணு உலைக் கழிவுகளின் கதிர்வீச்சு, பல ஆயிரம் வருடங்களுக்கு நீடித்து இருக்கும். இவற்றைப் பாதுகாத்து அப்புறப்படுத்துவது பெரும் சவாலானது.

ரஷ்யாவின் செர்னோஃபில், அமெரிக்காவின் மூன்று மைல் தீவு, ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்துகள் ஆகியவை உலகுக்கு அணு உலைகளின் அபாயத்தைப் பறைசாற்றுகின்றன. ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் தங்கள் அணு உலைகளை மூடிவருகின்றன.

அணு உலையில் விபத்து ஏற்பட்டால், சுற்றுவட்டாரத்தில் அனைத்து உயிர்களையும் பலியாவதோடு, நோய்ப் பாதிப்புகள் தரும். அந்தப் பகுதியின் அடுத்த பல சந்ததியினரையும் பாதிப்புகள் தொடரும்.

- எஸ்.ஜானவிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism