
##~## |
டியர் சுட்டீஸ்... உங்கள் வகுப்பிலேயே செய்வதற்கான எஃப்.ஏ. செயல்பாடுகள் (Projects) மற்றும் செயல்திட்டங்கள் (Activities) ஆகியவற்றை அளித்துவரும் சுட்டி விகடன், உங்கள் திறமையை மதிப்பிட்டுக் கௌரவிக்க உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இரண்டாம் பருவத்தில், உங்கள் கற்பனையில் உதித்த வித்தியாசமான செயல்திட்டங்களை, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் செய்திருப்பீர்கள் அல்லவா? அருமையான செயல்திட்டங்களை சக மாணவர்களுடன் இணைந்து குழுவாகப் உருவாக்கி இருப்பீர்கள்தானே...
இப்படி நீங்கள் செய்த அசத்தலான எஃப்.ஏ. செயல்திட்டங்களை, தரமான புகைப்படங்களாக எடுத்து அனுப்புங்கள். அத்துடன், அந்த புராஜெக்ட்டை எப்படிச் செய்து முடித்தீர்கள் என்பதற்கான செயல்முறை விளக்கத்தையும் எழுதி, சுட்டி விகடனுக்கு அனுப்புங்கள். கூடவே, உங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பள்ளியின் பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகிய விவரங்களைத் தவறாமல் குறிப்பிட்டு அனுப்பவும்.
ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் சிறந்த செயல்திட்டங்களை அனுப்பி, அவர்களை ஊக்கப்படுத்தலாம்.

எங்களின் நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் செயல்திட்டங்கள் சுட்டி விகடன் எஃப்.ஏ. பக்கங்களில் வெளியிடுவோம். தேர்வு செய்யப்படும் செயல்திட்டங்களுக்கு

500 மதிப்புள்ள புத்தகங்களும், சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்.
உங்கள் செயல்திட்டங்களின் தரமான புகைப்படங்கள், மற்றும் அது குறித்த விவரங்களுடன் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 8.12.2012.
அனுப்ப வேண்டிய முகவரி:
'எஃப்.ஏ. புராஜெக்ட்’ போட்டி,
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002.’
இ-மெயிலில் அனுப்ப விரும்புவோர், chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ. பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 918754467819 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ. செயல்பாடுகளுக்காக சுட்டி விகடன் உடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.