Published:Updated:

வானில் ஒரு மாளிகை!

வானில் ஒரு மாளிகை!

வானில் ஒரு மாளிகை!

வானில் ஒரு மாளிகை!

Published:Updated:
 ##~##

முன்னொரு காலத்தில் புலிச் சிங்கம் என்ற கொடுங்கோல் அரசன் இருந்தான். அவன் ஆண்டு வந்த  நாட்டில் வாழ்ந்த அறிவுமிக்க இளைஞனான கலைச்செல்வன், மக்களிடம் மதிப்பும் மரியாதையும் பெற்று இருந்தான். இது அரசனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள் கலைச்செல்வனை அரண்மனைக்கு அழைத்த அரசன், '’உன்னை எல்லோரும் அறிஞன் என்று சொல்கிறார்கள். உன் அறிவுக் கூர்மைக்கு ஒரு சோதனை வைக்கிறேன். வானத்தில் எனக்காக ஒரு மாளிகையை ஒரே வாரத்தில் கட்டித் தர வேண்டும். எத்தனை ஆட்கள் தேவையானாலும் எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் நான் அனுப்பிவைக்கிறேன். நான் சொன்னதை நீ செய்து முடித்துவிட்டால், இந்த நாட்டிலேயே சீரும் சிறப்புமாக வாழலாம். அப்படி முடியாவிட்டால், உன் தலையை வெட்டிவிடுவேன்' என்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரே வாரத்தில் வீட்டைக் கட்டித் தருவதாக அரசனிடம் உறுதி கூறிவிட்டுத் தன் வீடு திரும்பினான் கலைச்செல்வன். எப்படி வானத்தில் வீடு கட்டுவது என்று சிந்தித்தான். அருமையான திட்டம் ஒன்று அவன் மூளையில் உருவானது.

வானில் ஒரு மாளிகை!

வானில் பறக்கக் கூடிய பெரிய பட்டம் ஒன்றைச் செய்தான். அதன் ஒரு முனையில் மணி ஒன்றைக் கட்டினான். மெள்ள மெள்ள அதை வானில் பறக்கவிட்டான். பட்டமும் சிறிது சிறிதாக மேலே சென்று அதிக உயரத்தில் நின்றது. அதை இணைத்து இருந்த கயிற்றை மரத்தில் கட்டினான்.

கீழே இருந்து பார்ப்பவர்களுக்கு பட்டம் வானில் சிறு புள்ளியாகத் தெரிந்தது. பட்டம் காற்றில் அசையும்போது எல்லாம் அதில் கட்டி இருந்த மணி கணீர் என்று ஒலித்தது.

மறு நாள் வானத்தில் மணியோசை கேட்டு எல்லோரும் வெளியே வந்தனர். கலைச்செல்வனிடம் அரசன், 'என்ன ஓசை அது?' என்று கேட்டான்.

'அரசே, தாங்கள் கட்டளை இட்டபடி வானில் மாளிகை கட்டும் வேலை நடக்கிறது. இதோ, இங்கே உள்ள செங்கற்களும், மரங்களும் கட்டடம் கட்டுபவர்களுக்குத் தேவையாம். அதுதான் நாம் கேட்கும் மணியோசை. எப்படியாவது,  யார் மூலமாவது இந்தக் கயிற்றின் வழியே பொருள்களை நீங்கள் அனுப்பிவையுங்கள். இன்று மாலைக்குள் வானில் கட்டடம் தயாராகிவிடும்' என்றான் அவன்.

வானில் ஒரு மாளிகை!

அரசன் என்ன செய்வான்? அதன் பிறகு கலைச்செல்வனின் வழிக்கே அரசன் செல்வது இல்லை.  

றீஆசிரியர்கள் இதுபோன்ற வீட்டை மையப்படுத்தும் கதைகளைக் கூறி, வீடு கட்டுவதன் நோக்கம், வானத்தில் ஏன் கட்ட முடியாது?  வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? என மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தலாம். மாணவர்களின் பங்கேற்பு மற்றும் கருத்து வெளிப்பாடுகளுக்கு ஏற்ப அவர்களை மதிப்பீடு செய்யலாம்.  

- இரா.இந்திரா, உதவி ஆசிரியை,

டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.

வானில் ஒரு மாளிகை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism