Published:Updated:

எந்த ஆட்சி முறை சிறந்தது?

சுப.தமிழினியன்

எந்த ஆட்சி முறை சிறந்தது?

சுப.தமிழினியன்

Published:Updated:
 ##~##

ஒரு கட்சி: ஓர் ஆளும் கட்சி மட்டுமே இந்த ஆட்சி முறையில் இருக்கும். எதிர்க் கட்சிகள் செயல்பட அனுமதி கிடையாது. 'இந்த ஆட்சி கொண்டுவரும் திட்டத்தை அடுத்த ஆட்சி நிறுத்திவிடும்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடைகள் இருக்காது. ஒரு பிரச்னையில் விரைவாக முடிவுகள் எடுக்க முடியும். புதிதாக ஒரு சட்டம் கொண்டு வர விரும்பினால், உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியும்.

எந்த ஆட்சி முறை சிறந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு கட்சி ஆட்சி முறையில் எதிர்க் கருத்து, விவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை என்பதால், சர்வாதிகாரத்தின் கீழ் நாடு சென்றுவிடக்கூடும். இன்றளவும் சீனா, கியூபா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளில் இது நீடிக்கிறது.

இரு கட்சி: இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே 'இரு கட்சி ஆட்சி’ முறையில் செயல்படும். சம பலம் வாய்ந்த இரு பெரிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும். ஒரே கலாசாரம், ஒரே மொழிகொண்ட ஒரு தேசத்தின் அரசியலுக்கு இந்த முறையே போதுமானது.

எந்த ஆட்சி முறை சிறந்தது?

இரண்டே கட்சிகள் மட்டுமே இருப்பதால், தேர்தலில் உண்மையான போட்டி இருக்கும். மக்கள் நலப் பணிகளில் அதிகக் கவனம் செலுத்தப்படும். இந்த ஆட்சி முறையில் ஒரு சட்டம் கொண்டுவரும்போது, ஆளும் கட்சியின் சரி என்ற வாதமும், எதிர்க்கட்சியின் தவறு என்ற வாதமும் மட்டுமே எடுபடும். மூன்றாவது கருத்து என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

எந்த ஆட்சி முறை சிறந்தது?

பல கட்சி: இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள், 'பல கட்சி ஆட்சி முறை’யில் செயல்படுகின்றன. சம பலம் வாய்ந்த இரு கட்சிகளால் பெரும்பான்மை வெற்றி பெற முடியாத  சூழல் நிலவும் நாடுகளில், பல கட்சி ஆட்சி முறை நடக்கிறது. இதற்கு, இந்தியா ஓர் உதாரணம். எல்லாத் தரப்பு மக்களின் குரலை நிலைநாட்ட வாய்ப்பு இருக்கும். ஒரு கட்சியினால் ஒரு முடிவைத் தானாக எடுத்துவிட முடியாது. நாடாளுமன்றத்தில் மாறுபட்ட கருத்துகளைக்கொண்ட ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும். தேர்தலில் பெரும்பான்மைப் பலம் கிடைக்காதபோது, அரசியலில் நிலைப்புத்தன்மை இல்லாது போகும். இதனால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

எந்த ஆட்சி முறை சிறந்தது?

இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி, 'ஒரு கட்சி முறை’, 'இரு கட்சி முறை’, 'பல கட்சி முறை’ ஆகியவற்றில் எது சிறந்தது? என்று வகுப்பில் விவாதம் நடத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism