Published:Updated:

விஏஓ தேர்வு: ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு!

Vikatan Correspondent
விஏஓ தேர்வு: ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு!
விஏஓ தேர்வு: ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு!
விஏஓ தேர்வு: ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு!

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்துத்தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வரும் 14ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. 2 ஆயிரத்து 342 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வை 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

சரியாக விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அதில் தங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் தாங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்திய ரசீதை பத்திரமாக தேர்வாணைய மின் அஞ்சலுக்கு (contacttnpsc@gmaij.com) 9ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.