Published:Updated:

தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு: கல்வித்துறைக்கு நோட்டீஸ்!

Vikatan Correspondent
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு: கல்வித்துறைக்கு நோட்டீஸ்!
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு: கல்வித்துறைக்கு நோட்டீஸ்!
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு: கல்வித்துறைக்கு நோட்டீஸ்!

மதுரை: தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு குறித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஏழைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு தருவதை மாவட்டந்தோறும் கல்வித்துறை அதிகாரி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து, தமிழக செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் 2 வாரங்களுக்கு பதிலக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.