Published:Updated:

தேனீ வளர்ப்பைத் தெரிந்துகொள்வோம் !

லதானந்த்

தேனீ வளர்ப்பைத் தெரிந்துகொள்வோம் !

லதானந்த்

Published:Updated:
##~##

தேனீ வளர்ப்பை ஆங்கிலத்தில் 'அபிகல்ச்சர்’ (Apiculture) என்பர். 'அபிஸ்’ என்றால் கிரேக்க மொழியில் தேனீ என்று அர்த்தம். தேனீக்களில் 20,000-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், பெருங்கூட்டமாக வளரும் இனங்களையே தேனீ வளர்ப்புக்குப் பயன்படுத்த முடியும். தேனீக்களின்

தேனீ வளர்ப்பைத் தெரிந்துகொள்வோம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெருங்கூட்டத்துக்கு 'காலனி’ என்று பெயர். சில காலனிகளில் லட்சத்துக்கு மேற்பட்ட தேனீக்கள்கூட வசிக்கும். செயற்கை முறையில் ஒரு காலனியை உருவாக்கி, தேனைச் சேகரிப்பதைத்தான் 'தேனீ வளர்ப்பு’ என்கிறோம்.

தேன், சுவையான உணவுப் பொருள் மட்டும் அல்ல. ஏராளமான மருத்துவக் குணங்களும் நிரம்பியது. பல மருந்துகளில் தேனை ஒரு சேர்மானப் பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். தேனீ வளர்ப்பின் மூலம் தேன் மட்டும் இன்றி, தேனீக்களால் உண்டாக்கப்படும் மெழுகு, மகரந்தம், ராயல் ஜெல்லி போன்ற உப பொருட்களும் கிடைக்கின்றன. மேலும், தேனீக்கள் தேன் சேகரிக்கும் பணியில் ஈடுபடும்போதே தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடப்பதற்கும் உதவுகின்றன.

தேனீ வளர்ப்பின் மூலம் தூய்மையான தேனும், அதன் விற்பனையின் மூலம் வருமானமும் கிடைக்கும். தேனீ வளர்ப்புக்கு அரசு மற்றும் சில தன்னார்வ நிறுவனங்களும் பயிற்சி அளிக்கின்றன. ஒரு நாள் பயிற்சியே போதும். ஆனால், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில்நுணுக்கங்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளச் சிறிது காலம் பிடிக்கும்.

தேனீ வளர்ப்பைத் தெரிந்துகொள்வோம் !

தேனீ வளர்க்கும் இடம், கூட்டம் அதிகம் இல்லாத இடங்களாக இருப்பது நல்லது. தொழிற்சாலைப் புகை, வேதிப்பொருட்கள் வாசனை அதிகம் உள்ள இடங்கள் ஏற்றவை அல்ல. நிழலான இடங்கள் நல்லது. எறும்புகள் ஏறாத அளவுக்குச் சற்றே உயரமான இடத்தில் தேனீப் பெட்டிகளை வைக்கலாம். தரையில் பூச்சி மருந்துகளைக் குறைந்த அளவில் தெளித்தால் பூச்சிகளும் அண்டாது. ஏற்கெனவே

தேனீ வளர்ப்பைத் தெரிந்துகொள்வோம் !

தேனீக்களை வளர்ப்பவர்களிடம் இருந்து தேவையான தேனீக்களை வாங்கி, வளர்க்க ஆரம்பிக்கலாம். இரவு நேரம்தான் தேனீக்களை இடமாற்றம் செய்ய உகந்தது.

மலர்களில் தேன் சுரக்காத காலங்கள் அல்லது செடிகளில் மலர்கள் அற்ற பருவங்களின்போது சர்க்கரையை நீரில் கரைத்து, தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றித் தேன் பெட்டியில் வைக்கவேண்டும். தேன் பெட்டியில் உள்ள தேன் அடைகள் முக்கால் பங்காவது தேனால் நிரம்பி இருக்கும்போது தேன் சேகரிக்கலாம். ஆரம்பத்தில் அனுபவம் உள்ளவர்கள் உதவியுடன் தேன் அடைகளில் இருந்து தேன் சேகரிக்கவேண்டும்.

தேனீ வளர்ப்பைத் தெரிந்துகொள்வோம் !

தேனீ வளர்ப்புக்கு குறைந்த அளவிலேயே முதலீடு தேவைப் படும். அதிக நேரம் மற்றும் உழைப்பும் தேவை இல்லை. அதிக இடமும் வேண்டியது இல்லை. தோட்டங்களில் வளர்ப்பதால் விளைச்சல் அதிகமாகும். கவனமாகச் செயல்பட்டால், முதலாம் ஆண்டின் இறுதியிலேயே செலவிட்ட பணத்தைப்போல சுமார் இரு மடங்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism