Published:Updated:

பூமியைக் காப்போம் !

லதானந்த்

பூமியைக் காப்போம் !

லதானந்த்

Published:Updated:

 பூமி மாசடைவதற்கான முக்கியக் காரணங்கள்:

நதிகளில் கலக்கும் கழிவுநீர்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் களைக்கொல்லி மருந்துகள்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் கழிவுகள்.

வாகனங்களில் இருந்து வெளிவரும் அதிகப்படியான புகை.

இறந்துபோன விலங்குகள் அழுகும்போது வெளியாகும் வேதிப்பொருட்கள்.

அணுக்கதிர் வீச்சு.

பூமி மாசடைவதைக் குறைப்பதற்கான வழிகள்:

வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் அதிக அளவு புகை வெளியேறாமல் தடுப்பது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

பூமியைக் காப்போம் !

குப்பைகளை அழிக்கத் தீ வைக்காமல் இருப்பதும் ஒரு முக்கிய வழி. மேலும், குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காதவை எனத் தரம் பிரித்து, இயன்றவரை மறுசுழற்சி செய்வது.

சமையல் அறையில் கிடைக்கும் தாவரக் கழிவுகளைக் குழிகளில் இட்டு உரமாக்குவது.

பூமியைக் காப்போம் !

சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் வீடுகளுக்கும் மின்சாரம் பெற வழிசெய்வது.

இயன்றவரை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, சைக்கிள் மற்றும் நடை மூலம் பயணம்செய்வது.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது.

எங்கு எல்லாம் மரம் வளர்க்க இயலுமோ, அங்கே மரங்களை நடுவது.

வளர்ப்புப் பிராணிகள் தெருவில் கழிவை வெளியேற்றினாலும், அதை முறையாக அப்புறப்படுத்துவது.

தெருக்களில் எச்சில் துப்பாமலும், தெரு ஓரங்களில் சிறுநீர் கழிக்காமலும் இருப்பது. குழந்தைகளைத் தெருவில் மலம் கழிக்க அனுமதிக்காமல் இருப்பது.

வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஒலி அளவை மிதமாக வைப்பது.

நீர் நிலைகள் மாசுபடாமல் பாதுகாப்பது.

இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி, நாம் வாழும் பூமி தற்போது எவ்வாறு எல்லாம் மாசடைகிறது, அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி வகுப்பில் மாணவர்கள் விவாதிக்கலாம். அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு வழங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism