Published:Updated:

`கொரோனா வைரஸ் எதிரொலியால் பாதிக்கப்படும் பள்ளிக் கல்வி!'- யுனெஸ்கோ கவலை

கொரோனா வைரஸ் : மாணவர்கள்
கொரோனா வைரஸ் : மாணவர்கள் ( யுனெஸ்கோ ஃபேஸ்புக் )

கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக 290 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகளவில் கொரோனா தாக்கத்தால் இதுவரை 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பு 95,000 பேருக்கு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இந்த வைரஸ் இதுவரை 80 நாடுகளில் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கவலைதெரிவித்த, ஐ.எம்.எப். (சர்வதேச நாணய நிதியம்) இதைத் தடுப்பதற்குத் தீவிர தடுப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச அளவில் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கொரோனா
கொரோனா
விகடன்

குறிப்பாக உச்சக்கட்ட பாதிப்பில் இருக்கும் சீனாவில், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

அதில், ``கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 நாடுகளைச் சேர்ந்த 290.5 மில்லியன் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பேசியுள்ள யுனெஸ்கோ தலைவர் ஆட்ரி அசௌலே, (Audrey Azoulay), ``இந்த நோய் பாதிப்பால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது உலகளவிலான கல்வித்துறைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இது. இதன் வேகம் எந்த வகையிலும் கல்வியைச் சீர்குலைத்துவிடக் கூடாது. அதற்கான தீவிர நடவடிக்கைளை சர்வதேச அளவில், அவசரமாக எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

 ஆட்ரி அசௌலே, ( Audrey Azoulay)
ஆட்ரி அசௌலே, ( Audrey Azoulay)
Audrey Azoulay twitter.

சீனா, தென்கொரியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் முழுமையாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இத்தாலியில் பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளிகள் வரும் 15-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு