Published:Updated:

சாலைக்குறியீடுகள் மதிக்கப்படுகின்றனவா ?

சாலைக்குறியீடுகள் மதிக்கப்படுகின்றனவா ?

சாலைக்குறியீடுகள் மதிக்கப்படுகின்றனவா ?

சாலைக்குறியீடுகள் மதிக்கப்படுகின்றனவா ?

Published:Updated:

சாலைக்குறியீடுகள் மதிக்கப்படுகின்றனவா?

##~##

பேருந்துகளில் செல்வோர், நடந்து அல்லது சைக்கிளில் செல்வோர் மற்றும் ஆட்டோ அல்லது பெற்றோருடன் வாகனத்தில்       செல்வோர்  என  மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்க வேண்டும். இந்த மூன்று குழுக்களிலும் உள்ள மாணவர்களிடம், பள்ளியில் இருந்து வீடு வரும்போதும், வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும்போதும் சாலைகளில் காணப்படும் சாலைக் குறியீடுகளைக் கண்டு, அறிந்து வரச் சொல்லவும். அத்துடன், சாலைக்குறியீடுகளை அனைவரும் மதிக்கின்றனரா என்பதையும் கவனிக்கச் சொல்லவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள், மாணவர்கள் தெரிந்துகொண்ட சாலைக்குறியீடுகள் குறித்த தகவல்களை வகுப்பில் ஒவ்வொருவராகக் கூறச் சொல்லலாம். ஆசிரியர்கள் தாங்கள் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள சாலைக்குறியீடுகள் சார்ந்த படங்களைக் காட்டி, அது பற்றி மாணவர்களை விளக்கம் அளிக்கச் செய்யவும்.

சாலைக்குறியீடுகளை அனைவரும் மதிக்கின்றனரா? இல்லையா?

சாலைக்குறியீடுகள் மதிக்கப்படுகின்றனவா ?

சாலைக்குறியீடுகளை பின்பற்றாததால் ஏற்படும் விளைவுகள் யாவை?

அனைவரும் சாலைக்குறியீடுகளைப் பின்பற்ற என்ன செய்ய வேண்டும்?

இவைபோன்ற கேள்விகளைக் கொடுத்து, மூன்று குழுக்களையும் விவாதிக்கச் செய்யலாம். மாணவர்கள் ஆர்வத்தின் அடிப்படையிலும், விவாதத்தில் பங்கேற்றலையும் வைத்து மதிப்பிடலாம்.

- க.சரவணன், தலைமை ஆசிரியர்,
டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி,
கீழச் சந்தைப்பேட்டை, மதுரை.

 உப்பு நீரைக் குடிநீர் ஆக்கலாம் வாங்க!

தலைகீழ் சவ்வூடு பரவல் என்ற தத்துவத்தைப் பயன்படுத்தி, உப்புக் கலந்த நீரை ஒரு சவ்வின் வழியே செலுத்தும்போது, அந்தச் சவ்வில் உள்ள நுண்துளைகள் நீரை மட்டும் வெளியேற்றும். இந்த முறையில் உப்பு நீரை, குடிநீராக்கும் ஓர் எளிய சோதனை இது.

தேவையானவை: உப்பு நீர், உருளைக் கிழங்கு, டம்ளர் மற்றும் சிறிய கத்தி.

செய்முறை: முதலில் உருளைக் கிழங்கை எடுத்து, கத்தியின் உதவியால் சிறு பள்ளத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு, டம்ளரில் சிறிதளவு உப்பு நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். வெட்டிய உருளைக் கிழங்கை மெதுவாக உப்பு நீர் உள்ள டம்ளரில் வைக்கவும். (உப்புத் தண்ணீர், உருளைக் கிழங்கின் பள்ளத்தில் செல்லக் கூடாது). இந்த அமைப்பை அப்படியே அசையாமல் 5 அல்லது 6 மணி நேரம் வைக்கவும். பிறகு, நீங்கள் பார்க்கும்போது கீழிருந்து அந்தப் பள்ளத்தில் தண்ணீர் ஊடுருவி வந்து இருக்கும். அந்த நீரை எடுத்துச் சுவைத்தால், உப்பின் தன்மை குறைவாக இருக்கும். இந்தத் தத்துவமே தலைகீழ் சவ்வூடு பரவுதல் ஆகும்.

சாலைக்குறியீடுகள் மதிக்கப்படுகின்றனவா ?

ஆசிரியர்களுக்கு: உப்பு நீர், உருளைக் கிழங்கு மற்றும் டம்ளர் ஆகியவற்றை மாணவர்களை எடுத்து வரச் சொல்லுங்கள். சிறு கத்தியை நீங்களே எடுத்து வாருங்கள். வகுப்பில் ஒவ்வொரு மாணவரையும் இந்தச் செய்முறையைச் செய்யச் சொல்லுங்கள். உருளைக் கிழங்கில் கத்தியைக்கொண்டு பள்ளம் இடுவதை மட்டும் நீங்களே செய்யுங்கள். காலையில் இந்த அமைப்பை உருவாக்கி, வகுப்பின் ஓரமாக வைத்துவிட்டு, மாலையில் பள்ளி முடியும்போது தண்ணீரைச் சுவைத்தால் மாற்றம் தெரியும். மாணவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யலாம்.

- சு.குமார், ஆசிரியர்,
நல்லம்பாக்கம்.