'பக்தி இயக்கத் துறவிகளால் கண்டிக்கப்பட்ட சமுதாயச் சீர்கேடுகள் இப்போதும் தொடர்கிறதா? அவற்றைத் தடுக்கத் தீர்வுகள் யாவை?’ - இந்தத் தலைப்பில், விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர்களைக்கொண்டு விவாத மேடை நடத்தப்பட்டது.

தலைமை ஆசிரியர் எஸ்.பரந்தாமன் முன்னிலையில் ஆசிரியர்கள் எம்.செல்வம் மற்றும் தி.கல்பனா ஆகியோர் நடத்திய விவாத மேடையில் மாணவர்கள் பேசியவற்றில் இருந்து...

எஸ்.ஜெயச்சந்துரு: ''மாணிக்கவாசகர் பெரிதும் வலியுறுத்திய 'அன்பு’ ஒன்றே கடவுளை அடைய ஒரே வழி என்பது இப்பொழுது பொய்த்துப்போன ஒன்றாகிவிட்டது. குடும்பங்களுக்குள் அன்பைக் காண முடிவதில்லையே?''

அ.மகாலட்சுமி: ''ஏன் இல்லை என்கிறீர்கள்? மனிதர்களிடத்தில் அன்பு மிகுந்து காணப்படுகிறது. விலங்குகளிடம்கூட அன்பைக் காண முடிகிறது. நம் ஊருக்கு அருகில் உள்ள கீழ்பென்னாத்தூரில் மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குட்டிக் குரங்கைச் சூழ்ந்துநின்று அழுத, ஐந்து குரங்குகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா?''

ஏ.குமரேஷ்: ''ஆன்மிகப் பெரியவர்கள் 'கடவுள் ஒன்றே’ என்பதை வலியுறுத்தினர். ஆனால் இன்றோ, கடவுளின் பெயரால் பல சமூக அநீதிகள் நடப்பதைத் தினம் தினம் பத்திரிகைச் செய்திகளில் காண முடிகிறதே?''

ர.மஞ்சுமாதேவி: ''இறை உணர்வை வளர்ப்பதன் மூலம் நல்லொழுக்கத்துடன் வாழலாம் என ஆசிரியர் கூறியதை நீங்கள் மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள். நாம் வளர்க்கும் இறை எண்ணம் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.''

வி.விமல்: ''இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பெரிதும் வலியுறுத்திய வல்லபாச்சாரியாரின் எண்ணம் தகர்ந்துவிட்டதா என எனக்கு சந்தேகமாக உள்ளது!''

இ.ராம்குமார்: ''செஞ்சி பகுதியைச் சார்ந்த நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கும் நட்புக்கும் இலக்கணமாக நம் செஞ்சிக்கோட்டை மன்னர் ராஜாதேசிங்குக்கும் முகமது கானுக்குமான நட்பையும் உலகம் மறக்குமா?''

அ.செந்தமிழ்ச் செல்வி: ''ஏன் ஓர் உதாரணத்தை நாட்டுக்கே உரியதாகச் சொல்கிறீர்கள்? நாடுகளுக்கு இடையே போர் வரக் காரணமாகவும் மதங்களே அமைகின்றன.''

இ.சந்துரு: ''எங்கள் தெருவில், ஏன் எங்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையோடும் மகிழ்ச்சியோடும் இருந்து அன்பைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறோமே!''

வெ.உமாமகேஸ்வரி: ''இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு கபீர் பாடிய வரிகள் சாட்சி!

''ஓ மனிதனே!

என்னை நீ எங்கே தேடுகிறாய்?

உன்னருகே இருக்கிறேன்'' என்னும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.''

ஜெ.மாலதி: ''ராமானுஜர், 'உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை’ என்கின்ற நல்லெண்ணத்தை வலியுறுத்தினார். ஆனால், இன்னமும் சமூகத்தில் இக்கொடுமை உள்ளதைப் 'பரமக்குடி’, 'தர்மபுரி’ சம்பவங்கள் உண்மை என உரைக்கின்றனவே!''

ஆர்.ரூபன்குமார்: ''நீங்கள் கூறியது அரிதாக நடப்பது. ஆனால், சாதி - மதங்களை உடைத்து இன்று கலப்புத் திருமணங்கள் நடப்பதை சமூகம் ஏற்றுக்கொள்கிறதே!''

கோ.அபினா:''உருவ வழிபாட்டையும், மூடநம்பிக்கைகளையும் பெரிதும் எதிர்த்தார் குருநானக். ஆனால், இன்றும் எல்லா மதங்களிலும் இந்த மூடநம்பிக்கைகளில் மக்கள் மூழ்கிக்கிடக்கின்றனர்.''

எம்.அருண்கிளிண்டன்: ''கணினி யுகத்தில், விண்ணைத் தொட்டு இடம்பிடிக்க போட்டியிட்டுக்கொண்டு உள்ளபோது, மூடநம்பிக்கைகளில் மூழ்கியதாகக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.''

மு.செவ்வந்தி: ''ஆனால், அதே கணினிக்குப் பொட்டு வைத்து, பூ வைத்துப் பூஜைபோட்டுத்தானே துவங்குகிறோம்.''

க.பாக்கியலெட்சுமி: ''உண்மைதான். ஆனால், அது நம் கலாசாரத்தைச் சார்ந்தது.''

க.தீபா: ''நம் கலாசாரத்தில் உள்ள பழக்கவழக்கங்கள் பல அறிவியல் சார்ந்தே வகுக்கப்பட்டது. அது தெரியாமல் சிலர் மூடநம்பிக்கை எனக் கருதுகிறார்கள்.''

வி.கோபாலகிருஷ்ணர்:'' 'கடவுள் ஒன்றே’ என்ற எண்ணம் மக்களிடையே இன்று மறைந்துவிட்டது.''

எஸ்.கதிர்வேல்: ''ஆம். ஆனால், அந்த நிலைமை கூடிய விரைவில் மாறும்.''

இறுதியாகப் பேசிய ஆசிரியர்கள், ''நாம் அனைவரும் சாதி, மதம், இனத்தைத் தாண்டி ஒற்றுமையோடு வாழ்ந்தாலே இனி வரும் சமூகம் பக்தத் துறவிகள் எண்ணியது போல அமையும்'' எனக் கூறி முடித்தனர்.

* இதே போல், உங்கள் வகுப்பிலும் பாடத்தை ஒட்டிய தலைப்புகளில் விவாதமேடை நடத்தலாம். மாணவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு செய்துகொள்ளலாம்.

-ஸ்ரீ.திலீப், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்.