Published:Updated:

சுனாமி விளைவுகளும் மீட்பு நடவடிக்கைகளும் !

சுனாமி விளைவுகளும் மீட்பு நடவடிக்கைகளும் !

சுனாமி விளைவுகளும் மீட்பு நடவடிக்கைகளும் !

சுனாமி விளைவுகளும் மீட்பு நடவடிக்கைகளும் !

Published:Updated:
##~##

சுனாமியின் விளைவுகள்...

சில நிமிடங்கள் மட்டுமே சுனாமி என்கிற ஆழிப்பேரலை நீடித்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது வெளிப்பட்ட ஆற்றல், ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு வெளியிட்ட ஆற்றல் போல 1,500 மடங்குகள் ஆகும்.

மிகப் பெரிய ஆற்றல், மிகக் குறைவான நேரத்தில் வெளியானதால், ஏகப்பட்ட பேரிழப்புகள் உண்டாகின.

இந்தியாவில் மட்டும் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நின்றார்கள்.

கடலோரம் வாழ்ந்த மீனவர்களின் வாழ்க்கை மிகப் பெரிய இழப்பைச் சந்தித்தது. படகுகள், கட்டுமரங்கள், வலைகள் யாவும் அழிந்துபோயின. அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளானார்கள்.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நிகழ்ந்த துயரம் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாயிற்று.

சுனாமி விளைவுகளும் மீட்பு நடவடிக்கைகளும் !

கடற்கரைக்கு அருகில் இருந்த சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன.

பவளப் பாறைகள், அலையாத்திக் காடுகள், பல்லுயிர் வளம், வயல்வெளிகள் ஆகியனவும் பெரிய அளவில் அழிந்தன. நீர் மிகவும் மாசுபட்டது.

மகாபலிபுரத்தில் உள்ள கடல் மண்ணில் பல காலமாக மூடியிருந்த சிலைகள் பலவும் சுனாமியின் விளைவாக வெளிப்பட்டன.

மீட்பு நடவடிக்கைகள்...  

சுனாமி விளைவுகளும் மீட்பு நடவடிக்கைகளும் !

காவல் துறை, தீயணைப்பு படை, ராணுவம் முதலியன மீட்புப் பணியில் ஈடுபட்டன. அந்தந்த ஊரின் துப்பரவுப் பணியாளர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து இடிபாடுகளை அகற்றினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய், ஆடைகள் ஆகியன வழங்கப்பட்டன. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி தரப்பட்டது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களுக்கு ஏற்றவாறு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. மீனவர்களுக்கும் அவ்வாறே இழப்பீட்டுத் தொகை தரப்பட்டது.

வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி மற்றும் வங்கிக் கடன் பெறவும் வழிவகுக்கப்பட்டது.

மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு கலந்தாய்வும், குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி பெற ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

மொத்தமாக ரூ. 5,280 கோடி நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்தில் மட்டும் செலவிடப்பட்டது.  

நல்ல நீர், சுகாதாரம் பேணுதல், காடுகளைக் காத்தல் ஆகியவற்றுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இங்கே கொடுக்கப்பட்டு உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி, '2004-ல் ஏற்பட்ட சுனாமியின் விளைவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்’ குறித்து கட்டுரை எழுதி, அதனை ஆசிரியர்களிடம் அளித்து மதிப்பீடு பெறலாம்.

- பூ.கொ.சரவணன்