Published:Updated:

மாநிலங்களவை தேர்தல்: நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை தேர்தல்: நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு!
மாநிலங்களவை தேர்தல்: நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு!
மாநிலங்களவை தேர்தல்: நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு!

சென்னை: மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சுடுகாட்டு ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற தி.மு.க.வை சேர்ந்த செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்களில், நவநீதகிருஷ்ணன் தவிர மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.