Published:Updated:

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு!
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு!
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. விளையாட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு முடிந்து விட்டது.

இந்நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (27ஆம் தேதி) தொடங்கி ஜூலை 28ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த கலந்தாய்வுக்கு 3,000 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்த வழக்கில், அங்கீகாரம் அளிக்கப்பட்ட கல்லூரிகளை பட்டியலில் சேர்ப்பது அவசியம் என்றும், அந்த பட்டியலில் புதிதாக சில கல்லூரிகள் வருவதால் அவைகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கவும் ஏ.ஐ.சி.டி.இ-க்கு ஜூலை 3ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து, பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும், கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.