##~## |
ஆறாம் வகுப்பின் 'The Food you Eat' பாடத்தை ஒட்டி, எங்கள் வகுப்பு அறையிலேயே உணவுத் திருவிழா ஒன்றை நடத்த முடிவுசெய்தோம். இதற்கான அறிவிப்பை வெளியிட்டதும், மாணவர்கள் தங்களுக்குள் குழுக்களை அமைத்துத் திட்டம் வகுக்கத் தொடங்கினர். அவர்களிடம்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பின்பற்றச் சொன்ன ஒரே விதிமுறை, 'ஜங்க் ஃபுட் கூடாது’ என்பது மட்டுமே!
உணவுத் திருவிழாவுக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த நாளில், யார் யார் என்னென்ன உணவு வகைகளைக் கொண்டுவருவது என மாணவர்களே தீர்மானித்துக்கொண்டனர். அதேபோல், திருவிழாவுக்குத் தேவையான இலை, கப் முதலானவற்றையும் பிரித்துக்கொண்டனர்.
அந்த உணவுத் திருவிழாவில் மாணவர்களின் குழுச் செயல்பாட்டைக் காணமுடிந்தது. ஒவ்வொரு குழுவில் இருந்தும் இருவர் தண்ணீர் வைத்தனர். ஒருவர் உணவைப் பரிமாறினார். ஒருவர் தேங்காய்ப் பாலை அழகாக கப்பில் ஊற்றிக் கொடுத்தார். ஒவ்வொரு மாணவரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி.

உணவுத் திருவிழாவில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை ஒரு குழுவினர் எழுதி, மெனு கார்டு தயார்செய்தனர். மற்றொரு குழுவினர், அதில் இடம்பெற்ற காய்கறி மற்றும் பழங்களைப் பட்டியல் இட்டு, அவற்றில் உள்ள சத்துகளையும் குறிப்பிட்டு எழுதினர். ஆரோக்கிய உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதுடன், அதன் நன்மைகளையும் அன்று மாணவர்கள் நேரடியாகத் தெரிந்துகொண்டனர்.

இதேபோல், உங்கள் வகுப்பிலும் உணவுத் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்யலாமே!
நா.கிருஷ்ணவேணி,
ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
நல்லம்பாக்கம்.