Published:Updated:

மக்கள்தொகை இன்னும் உயர்ந்தால்?

கலந்துரையாடல் இடம்: எட்டாம் வகுப்பு அறை, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி. ஒருங்கிணைப்பு: வகுப்புத் தலைவர் அமர்நாத்.

மக்கள்தொகை இன்னும் உயர்ந்தால்?

கலந்துரையாடல் இடம்: எட்டாம் வகுப்பு அறை, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி. ஒருங்கிணைப்பு: வகுப்புத் தலைவர் அமர்நாத்.

Published:Updated:

பங்கேற்றோர்: பவித்ரா, பெரியநாயகி, கல்பனா, சரண்யா,
வீரமணி, விஜயகுமார், செல்வராயர் மற்றும் ராஜா.

##~##

'இந்திய மக்கள்தொகை அடுத்த 10 ஆண்டுகளில் 5 சதவிகிதம் உயர்ந்தால், என்னென்ன பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும்?’ என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே ஒரு கலந்துரையாடல் நடந்தது. அவர்களின் உரையாடல் இதோ:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமர்நாத்: ''உலக மக்கள்தொகையில் நம் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலை நீடித்தால், நாம் அடிப்படைத் தேவைகளுக்கே அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும்.''

சரண்யா: ''குடிப்பதற்குத் தண்ணீர்கூடக் கிடைக்காதாம். அடுத்த உலகப் போர், தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.''

வீரமணி: ''தண்ணீருக்கே இந்த நிலை என்றால், உணவுக்கு என்ன செய்யப்போகிறோம்?''

கல்பனா: ''வேறென்ன? தண்ணீரையும் உணவையும் இறக்குமதிதான் செய்யவேண்டும்.''

ராஜா: ''அப்படிச் சொல்ல முடியாது. மழை நீரை ஒழுங்காகச் சேமித்தாலே, நாம் தண்ணீர்ப் பிரச்னையை திர்த்துவிடலாம்.''

மக்கள்தொகை இன்னும் உயர்ந்தால்?

விஜயகுமார்: ''உணவுப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது? விளைநிலங்களை வீட்டு மனைகள் ஆக்குவதால் விவசாய நிலம் இல்லாமல் போகிறது.''

பெரியநாயகி: ''மக்கள்தொகை அதிகமானால், வீடுகளும் அதிகமாகத்தானே தேவைப்படும். அதற்கென்ன செய்வதாம்?''

செல்வராயர்: ''நகரங்களில் கட்டுவதைப்போல் கிராமங்களிலும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டலாமே. இப்படிச் செய்தால்  விளை நிலங்கள் கொஞ்சமாவது காப்பாற்றப்படும்.''

பவித்ரா: ''நல்ல யோசனை. அப்படிச் செய்யாவிட்டால், நம் மக்கள் காடுகளை அழித்து விவசாய நிலமாக்கி விடுவார்கள். காடுகள் இல்லாமல், நாட்டில் மழை பொழியாது. அப்புறம், வயல்கள் காய்ந்து பாலைவனம் ஆகிவிடும். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.''

அமர்நாத்: ''காடுகள் அழிந்தால் அங்கே இருக்கும் விலங்கினங்களும் பறவையினங்களும் மற்ற உயிரினங்களும் அழியும். அது நம் சூழ்நிலை மண்டலத்தையே பாதிக்கும். அது மட்டுமா? மக்கள் தொகைப் பெருக்கத்தால் நம் அன்றாட வாழ்க்கையே மிகவும் பாதிக்கும். இப்போதே எங்கு சென்றாலும் கூட்டம்.

பேருந்து, தொடர்வண்டி, மருத்துவமனை, ரேஷன் கடை, பெட்ரோல் நிலையம், சாலை என எல்லா இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த மக்கள்தொகைக்கே இப்படி என்றால், இன்னும் அதிகமானால் நம் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, நாம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது அவசியம்.''

இதைப்போலவே உங்கள் வகுப்பிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தலாம். மாணவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப, அவர்களை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம்.

- இரத்தின. புகழேந்தி, ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.