Published:Updated:

புவி நேரம்... விளக்குகளை அணைப்போம்!

புவி நேரம்... விளக்குகளை அணைப்போம்!

புவி நேரம்... விளக்குகளை அணைப்போம்!

புவி நேரம்... விளக்குகளை அணைப்போம்!

Published:Updated:
##~##

உலகம் முழுவதும் மார்ச் 23 அன்று இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்குப் புவி நேரம் அனுசரிக்கப்படுகிறது. எல்லா நாடுகளும் தங்கள் உள்ளூர் நேரத்தின்படி, இரவு 8.30 முதல் 9.30 மணி வரை புவி நேரத்தைக் கடைபிடிக்கும்.

மற்ற கொண்டாட்டங்கள்போல் அல்லாமல், புவி நேரம் என்பது இருக்கிற விளக்குகளை அணைத்துவிட்டு, முடிந்தவரை இருளில் கடைப்பிடிக்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதன்முதலாக 2007ம் ஆண்டுதான் புவி நேரம் அனுசரிக்கப்பட்டது. ஆஸ்திரேயாவின் சிட்னி நகரில் சுமார் 22 லட்சம் பேர் இந்தப் புவி நேரத்தில் கலந்துகொண்டனர். அடுத்த வருடமே உலகம் முழுதும் 400 நகரங்களில் சுமார் 5 கோடி மக்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

Word Widife Fund எனப்படும் உலக வன நிதியம் அமைப்பு, ஆஸ்திரேயாவின் சிட்னியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்புதான் புவி நேர பிரசாரத்தை முன் எடுத்து செல்கிறது.

புவி நேரம்... விளக்குகளை அணைப்போம்!

ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை 'புவி நேரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருட மார்ச் மாதக் கடைசி சனிக்கிழமை மேற்கத்திய நாடுகளில் 'புனித சனிக்கிழமை’யாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், அதற்கு முந்தைய சனிக்கிழமையான மார்ச் 23 தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

வீடு, வர்த்தக மையம், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் அத்தியாவசியமானவை தவிர்த்து, பிற விளக்குகள் அனைத்தும் புவி நேரத்தில் அணைக்கப்படும்.

மின்சார உற்பத்திக்காக ஏராளமான கார்பன் எரிபொருட்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்தப்படுகின்றன. இதனால், வளி மண்டலத்தில் அதிகப்படியான கார்பன் கூட்டுப்பொருட்கள் சேர்ந்து, புவி வெப்பமயமாதலும், காலநிலை மாற்றங்களும் உருவாகின்றன.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு அவசியமற்ற மின் உபயோகத்தைக் குறைப்பதன் மூலம் நாடுகள் தோறும் பல 100 மெகா வாட் மின்சாரம் சிக்கனமாகிறது. மறுபக்கம் டன் கணக்கான கார்பன்டை ஆக்ஸைடு வளியில் சேர்வதைத் தடுக்கிறது.

ஒரு மணி நேர இருள் வாழ்க்கை என்பதன் மூலம் மின்சாரத்தின் அருமையை உணர்வது, புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்பு உணர்வைப் பெறுவது என இரண்டு விஷயங்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

www.earthhour.org என்ற சிறப்பு இணையதளம் இதற்கெனப் பிரத்யேகமாகத் துவக்கப்பட்டு, உலகம் முழுக்க புவி நேரப் பிரசார ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

உலகப் புவி நேரத்தை முன்னிட்டு, நாடுகள் பலவும் அன்றைய தினம் புவி வெப்பமயமாதலை குறைக்கும் வகையில் தங்கள் பங்குக்குப் பல திட்டங்களை வெளியிடுகின்றன. புவி நேரத்தின்போது சிட்னி ஒபேரா ஹவுஸ், நியூயார்க் எம்பயர் பில்டிங் என சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டடங்கள் இருளில் மூழ்குவது பார்வைக்கு வித்தியாசமாக இருக்கும்.

புவி நேர நிகழ்வின்போது நாமும் நம் பங்குக்கு அவசியமற்ற மின் விளக்குகள் மற்றும் மின் உபயோக பொருட்களின் பயன்பாட்டை ஒரு மணி நேரத்துக்கு நிறுத்திவைப்போம். அதற்காக இப்போதே நமது பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நம்மால் முடிந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவோம்.

ஒரு பக்கம் இதுபோன்ற நடவடிக்கைகளால் வளி மண்டலத்தில் சேரும் கார்பன் கூட்டுப்பொருட்களை தவிர்ப்போம். மறுபுறம் ஏராளமான மரங்களை வளர்த்து, வளிமண்டலக் கார்பனை அவை கிரகிக்கச் செய்வதன் மூலமும் புவி வெப்பமயமாதலைத் தவிர்ப்போம்.

இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி, உங்களது சொந்தக் கருத்துகளையும் சேர்த்து, புவி நேரம் குறித்த கட்டுரையை எழுதி ஆசிரியரிடம் அளிக்கலாம்.

- எஸ்.ஜானவிகா