Published:Updated:

பத்தாம் வகுப்புக்குப் பின் என்ன படிக்கலாம்?

ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்?

பத்தாம் வகுப்புக்குப் பின் என்ன படிக்கலாம்?

பத்தாம் வகுப்புக்குப் பிறகு, மேல்நிலைப் பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு எழும் முதல் கேள்வி... ப்ளஸ் 1-ல் என்ன க்ரூப் எடுக்கலாம்?

'அப்பா அந்த க்ரூப் எடுக்கச் சொன்னார்’, 'அம்மாதான் இந்த க்ரூப் எடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க’, 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எடுக்கிறதாலே இதே க்ரூப்பை நான் எடுக்கிறேன்’, 'என் மார்க்குக்கு இந்த க்ரூப்தான் கிடைச்சுது’, 'என்னோட டீச்சர் சொன்னதால் இந்த க்ரூப்பை எடுக்கிறேன்’.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ப்ளஸ் 1 சேரும் மாணவர்கள் பலரும் தங்களது க்ரூப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு இது போன்ற காரணங்களையே சொல்கின்றனர். அவர்களில் பலரும் சில மாதங்கள் கழித்து, 'அய்யய்யோ, அந்த க்ரூப்பை எடுத்து இருக்கலாமே!’, 'இந்த க்ரூப் எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்குமே’ என்று புலம்புவதும் உண்டு. இத்தகைய நிலைக்கு ஆளாகாமல், உங்களுக்கும் உங்கள் இலக்குகளுக்கும் பொருத்தமான க்ரூப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டவே இந்தச் சிறப்புப் பக்கங்கள்...