Published:Updated:

வாய்ப்புகள் பலவிதம் !

வாய்ப்புகள் பலவிதம் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

'கணிதத்தில் கொஞ்சம் தடுமாறுவேன். ஆனால், அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களிலும் பின்னி எடுப்பேன்’ என்று கூறும் மாணவர்களுக்கு ஏற்றது செகண்ட் க்ரூப் (Group - II).

இந்தப் பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவை கட்டாயப் பாடங்கள். இவற்றுடன் மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, நர்ஸிங், நியூட்ரீஷன் அண்ட் டயடெடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன் மற்றும் ஹோம் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

எந்த மாணவர்களுக்கு செகண்ட் க்ரூப் பொருத்தமாக இருக்கும்? இந்தப் பிரிவுக்குப் பின் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள்பற்றி கூறுகிறார், தர்மபுரி - கோணங்கி ஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், கோ.மாரிமுத்து.

வாய்ப்புகள் பலவிதம் !

''மாணவர்கள் சிலர் கணிதப் பாடத்தில் சிரமப்படுவார்கள். ஆனால், அறிவியல் உள்பட பிற பாடங்களைச் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அத்தகைய மாணவர்களுக்கும், மருத்துவம் சார்ந்த படிப்பினை இலக்காகக் கொண்டவர்களுக்கும் இந்தப் பாடப் பிரிவு ஏற்றது. இந்தப் பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுபவர்களுக்கு எம்.பி.பி.எஸ், பி.ஹெச்.எம்.எஸ், சித்தா,

வாய்ப்புகள் பலவிதம் !

ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவப் படிப்புகளில் வாய்ப்புகள் உள்ளன. கால்நடை மருத்துவம், வேளாண், தோட்டக்கலை, மீன்வளம் போன்றவற்றுள் பட்டப் படிப்புப் படிக்கலாம். இதனைத் தவிர செவிலியர், பிஸியோதெரபி போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புகளிலும் சேர முடியும். அறிவியல் பாடங்களான உயிரியல், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி போன்றவற்றில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் ஆர்வம் உள்ளவர்களும், பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி, கல்லூரி ஆசிரியர்களாக விரும்புபவர்களும் இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது நல்ல அடித்தளமாக அமையும்.

செகண்ட் க்ரூப்பைப் பொறுத்தவரையில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, நர்ஸிங், நியூட்ரீஷன் அண்ட் டயடெடிக்ஸ், இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன், ஹோம் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாக உள்ள பிரிவு, மாவட்டம்தோறும் குறிப்பிட்ட பள்ளிகளில்தான் உள்ளன. நீங்கள் சேர விரும்பும் பள்ளியில் எந்த விருப்பப் பாடம் உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது'' என்கிறார் மாரிமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு