Published:Updated:

பாலிடெக்னிக் படிக்கலாம்!

பாலிடெக்னிக் படிக்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்... உங்கள் இன்ஜினீயர் கனவை நிறைவேற்ற முடியும். இதற்கு, பாலிடெக்னிக் கல்லூரிகள் வழிவகுக்கின்றன.

பொறியியல் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் தாராளமாக பாலிடெக்னிக் படிப்புகளைப் பரிசீலிக்கலாம் என்கிறார், சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். கே.சுந்தரமூர்த்தி.

''பாலிடெக்னிக் படிப்புகளில் சிவில் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முதலானவை முக்கியப் பாடப் பிரிவுகளாக உள்ளன.

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், இவற்றில் விரும்பும் துறையைத் தேர்வுசெய்யலாம். மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பான பாலிடெக்னிக் படிப்பு முடித்ததும், அதே படிப்பை இன்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களோடு சேர்ந்து படிக்க முடியும்.

பாலிடெக்னிக் படிக்கலாம்!

மேலும், ஆட்டோமொபைல்ஸ் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெட்டல்ட்ரானிக்ஸ்

பாலிடெக்னிக் படிக்கலாம்!

போன்ற பல பிரிவுகளும் இருக்கின்றன. பாலிடெக்னிக் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. அதேநேரம், 80 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள், ஆங்கில மொழிவளமும் பெற்றிருந்தால் அதிக ஊதியத்தில் வேலை கிடைக்கும்.

பொதுத் தேர்வு முடிவு வெளியானதும், பாலிடெக்னிக் கல்லூரிகள் விண்ணப்பங்களை வெளியிடும். ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள எந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கும்  விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க எல்லோரும் விரும்புவார்கள். எனவே, விண்ணப்பம் எந்த ஊரில் வாங்கி இருந்தாலும், படிக்க விரும்பும் கல்லூரியின் முகவரிக்கு காலதாமதம் இல்லாமல் அனுப்பிவைக்க வேண்டும். தேர்வு செய்த படிப்பில் சந்தேகம் இன்றிக் கற்பதும், நம்பிக்கையோடு படிப்பதுமே வாய்ப்புகளை உருவாக்கும்'' என்கிறார் சுந்தரமூர்த்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு