Published:Updated:

ஐ.டி.ஐ-யில் சேர விருப்பமா ?

ஐ.டி.ஐ-யில் சேர விருப்பமா ?

பிரீமியம் ஸ்டோரி
##~##

'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் கவலை இல்லை’ என்பார்கள். தொழில் கல்வியே வாழ்க்கைக்குத் துணை நிற்கும். அரசு வேலை என்று இல்லாமல், சுயமாகவும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிப்பதே ஐ.டி.ஐ. எனப்படும் தொழில் பயிற்சிப் படிப்புகள்.

ஐ.டி.ஐ. படிப்புகள்பற்றி, மதுரை சி.எஸ்.ஐ. தொழில் பயிற்சிப் பள்ளியின் முதல்வர், ஜெ.ராஜபாண்டியன் விளக்குகிறார்.

''தொழில் பயிற்சிப் பள்ளியில் சேர, 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு, எலெக்ட்ரிகல், மோட்டார் மெக்கானிக், ஃபிட்டர், டர்னர், ஏ/சி மெக்கானிக் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. இதில், மாநில அரசின் பாடத்திட்டங்களோடு, மத்திய அரசின் பாடத்திட்டங்களும் உண்டு. அதற்குத் தனிச் சான்றிதழ் வழங்கப்படும்.

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர் களுக்கும் ஒயர்மேன், வெல்டிங் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாம் தோல்வி அடைந்துவிட்டோமே என்று கவலைப்படத் தேவை இல்லை. தேர்ச்சி பெற்றவர்கள் படிக்கும் பள்ளியிலேயே இவர்களும் படிக்கலாம்.

ஐ.டி.ஐ-யில் சேர விருப்பமா ?

தேர்வு முடிவுகள் வெளியானதும், தொழில் கல்விப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பும், விண்ணப்பமும் வெளியிடப்படும். மாணவர்கள் தம் பெற்றோருடன் தொழில் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிக்கு நேரில் சென்று, அங்கு படிக்கும் மாணவர்களிடம் தான் படிக்க விரும்பும் பாடம்குறித்து நன்கு கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

மாணவர் விரும்பும் பாடத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர், தமிழ்நாட்டுக்குள் உள்ள எந்தப் பள்ளியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தைக் கால தாமதம் இன்றி அந்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக, ஐ.டி.ஐ.-யில் சேரும் மாணவர்கள், பின்னர் உயர் தொழில் கல்வி படித்து பெரிய அளவில் உயர்வதற்கும் வாய்ப்பு உண்டு. இரண்டு ஆண்டுகள் ஐ.டி.ஐ. படிப்பு முடித்தவர்கள், மேற்கொண்டு பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம். முயற்சியுடைய மாணவர்கள் மேலும் படித்து இன்ஜினீயர் ஆகலாம். ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்தால் இங்கேயும் சாதிக்கலாம். ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எப்போதும்போல் சிறப்பாகவே உள்ளன'' என்கிறார் ராஜபாண்டியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு