Published:Updated:

தாஜ்மஹால் உலக அதிசயம் ஆனது எப்படி ?

தாஜ்மஹால் உலக அதிசயம் ஆனது எப்படி ?

பிரீமியம் ஸ்டோரி
##~##

'உலகின் ஏழு புதிய அதிசயங்கள்’ என்ற அறக்கட்டளை அமைப்பு, உலகம் முழுக்க ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகளை,  2007 ஜூன் 7-ம் தேதி (07.07.07) அறிவித்தது. அதில் தாஜ்மஹாலும் இருந்தது. அதற்கு முன்பே தாஜ்மஹாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.

உலக அதிசயங்கள் பட்டியலில் ஒரு நினைவுச் சின்னம் பரிசீலனையில் இடம்பெற அவை மனிதர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும்; 2,000 ஆண்டுகளுக்குள் அதன் வயது இருக்க வேண்டும்; பாதுகாக்கப்பட்டு பொலிவுடன் திகழ வேண்டும் என நிறைய நிபந்தனைகள் இருந்தன.

ஏழு அதிசயங்களும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்துவதாக அமைந்திருந்தன. விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக சீனப் பெருஞ்சுவரும், காதலுக்கான எடுத்துக்காட்டாக தாஜ்மஹாலும் தேர்வு செய்யப்பட்டன.

இந்திய - இஸ்லாமியக் கட்டடக் கலையின் உச்சமாக தாஜ்மஹால் திகழ்கிறது. ஜும்மா மசூதி, ஹுமாயூன் கல்லறை போன்ற பல மொகலாயச் சின்னங்கள் இத்தகைய கட்டடக் கலையைப் பிரதிபலித்தாலும், தாஜ்மஹால் மட்டுமே இந்தக் கட்டடக் கலை வகையில் மிகச் சிறப்பானது.

தாஜ்மஹால் உலக அதிசயம் ஆனது எப்படி ?

தாஜ்மஹாலின் கட்டட வடிவமைப்பும், நிறத் தேர்வுகளும் இதை மேலும் சிறப்புடையதாக்கி இருக்கிறது. உதாரணமாக, தாஜ்மஹாலின் குவிந்த மற்றும் குழிந்த வடிவமைப்புகள் அத்தனை நெளிவு சுழிவுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன. இதன் மீது வெயில் பட்டுப் பிரதிபலிக்கும் நிறமும், பச்சைத் தோட்டங்களும், செந்நிறப் பாதைகளும் வண்ணமயமாக மனதை மயக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

தாஜ்மஹாலைச் சுற்றியிருக்கும் நான்கு மினார்கள், அதற்கு ஒரு கம்பீரத்தைத் தருவதோடு, புகைப்படமாகப் பார்க்கும்போதுகூட தாஜ்மஹாலுக்கு ஒரு முப்பரிமாணத் தோற்றத்தைத் தருகிறது. இந்தச் செயல், திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். மொகலாயர்களின்  ஓவியக் கலையும் புகழ்பெற்றது.

இந்தக் குறிப்புகளைக்கொண்டு, தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவதற்கான காரணங்களை விவரித்து, கட்டுரை ஒன்றை எழுதி, ஆசிரியரிடம் அளித்து மதிப்பீட்டைப் பெறலாம்.

- சுப.தமிழினியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு