Published:Updated:

வண்ணமயமான செயல்திட்டம் !

வண்ணமயமான செயல்திட்டம் !

வண்ணமயமான செயல்திட்டம் !

வண்ணமயமான செயல்திட்டம் !

Published:Updated:

ஒரு பிளாஸ்டிக் இலையின் அடிப் பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற தெர்மாகோலை ஒட்டிக்கொள்ளுங்கள். அந்த இலையை 30 செ.மீ. அளவிலான நூலில் கட்டுங்கள். சைனா களிமண்கொண்டு, புழு மாதிரியைச் செய்து கொள்ளுங்கள். இதை இன்னொரு 30 செ.மீ. அளவிலான நூலில் கட்டுங்கள். பிறகு, வார்னிஷ் தாளைக் கூம்பு போல் சுற்றி, அதன் மேல் பக்கத்தை மூடிக்கொள்ளுங்கள். இதை வேறொரு  30 செ.மீ. அளவிலான நூலில் கட்டுங்கள். அதன்பின், வெள்ளைச் சார்ட்டில் வண்ணத்துப்பூச்சியை வரைந்து, உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் வண்ணம் தீட்டி, அதை வேறொரு 30 செ.மீ. நூலில் கட்டுங்கள்.

தேய்ந்துபோன குறுந்தகட்டில் நான்கு துளைகளை இட்டு, வரிசைப்படி தனித் தனி நூல்களில் கட்டியுள்ள முட்டை, புழு, கூட்டுப் புழு மற்றும் வண்ணத்துப்பூச்சி ஆகியவற்றைக் கட்டிக்கொள்ளுங்கள்.

வண்ணமயமான செயல்திட்டம் !

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி மாதிரி ரெடி. இதை ஆசிரியரிடம் அளித்து மதிப்பீட்டைப் பெறலாம்.

இதைப் போலவே, வண்ணத்துப்பூச்சிக்குப் பதிலாக தேனீயை வரைந்தும் இந்த மாதிரியை உருவாக்கலாம்.

வண்ணமயமான செயல்திட்டம் !

மு.சங்கீதா, ஆசிரியை,
ஊ.ஒ.தொ. பள்ளி,
புதுப்பேட்டை

. நிறுத்தக்குறிகள் இடுவோம்!

மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். முதல் குழுவுக்குச் செய்தித்தாள் ஒன்றைத் தரவும். அதிலிருந்து ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பத்திகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள நிறுத்தக்குறி களை நீக்கி, தனியாகப் பத்தியைத் தயாரிக்கச் செய்யவும்.

இரண்டாவது குழுவுக்கு மாத இதழ் ஒன்றின் கட்டுரையைக் கொடுத்து, அதில் ஒரு பத்தியைத் தேர்ந்தெடுக்கச் செய்து, நிறுத்தக்குறிகளை நீக்கி, ஒரு பத்தியைத் தயாரிக்கச் செய்யவும். மூன்றாவது குழுவுக்கு வார இதழ் ஒன்றினைக் கொடுத்து, அதிலுள்ள செய்தித் துணுக்கு ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதில் நிறுத்தக்குறிகள் நீக்கி, தனியாகப் பத்தி ஒன்றினைத் தயாரிக்கச் செய்யவும்.

வண்ணமயமான செயல்திட்டம் !

நான்காவது குழுவுக்கு சிறுவர் இதழ் ஒன்றினைக் கொடுத்து, அதில் உள்ள அறிவியல் அறிஞர் பற்றிய செய்தியில் நிறுத்தக்குறிகள் நீக்கி, தனியாகப் பத்தி ஒன்றினைத் தயார் செய்யவும். இப்போது, நான்கு குழுக்களும் தங்களிடம் உள்ள நிறுத்தக்குறிகள் நீக்கப்பட்ட பத்தியினை, பிற குழுக்களுக்குக் கொடுக்கச் செய்யவும். பொருத்தமான இடத்தில் நிறுத்தக்குறிகளை இடச் செய்யவும். பின், ஒவ்வொரு குழுவும் தாங்கள் கொடுத்த பத்திக்கான பொருத்தமான நிறுத்தக்குறிகள் இட்டு, அதற்கான காரணத்தை விளக்கிக் கூற வேண்டும்.

மாணவர்களின் ஈடுபாடு, ஆர்வம், நிறுத்தக் குறிகள் குறித்த அறிவு, குழுவில் இணைந்து செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

-க.சரவணன்