Published:Updated:

வர்க்கமூலச் சுருள் வரைவோம் !

வர்க்கமூலச் சுருள் வரைவோம் !

வர்க்கமூலச் சுருள் வரைவோம் !

வர்க்கமூலச் சுருள் வரைவோம் !

Published:Updated:

இந்த ஆண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு கணக்குப் பாடத்துக்கு ஆய்வகச் செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், மெய்யெண் தொகுப்பு எனும் இரண்டாவது இயலுக்கான ஆய்வகச் செயல்பாடாக, 'வர்க்கமூலச் சுருள் வரைதல்’ கொடுக்கப்பட்டுள்ளது. அதன் செய்முறையைப் பார்ப்போம்.

வர்க்கமூலச் சுருளை முதன்முதலாக கிரேக்க நாட்டுக் கணித அறிஞர் தியோடரஸ் என்பவர் அமைத்துக் காட்டினார். அதனால், இது தியோடரஸ் சுருள் என்றும், பித்தகாரஸ் தேற்றத்தைப் பயன்படுத்தி அமைப்பதால், பித்தகாரஸ் சுருள் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலில் கி4 அளவுள்ள தாளை நீளவாக்கில் இரண்டாக மடிக்கவேண்டும். அந்த மடிப்பின் மீது தாளின்  வலப்புறத்தில் வலமிருந்து சுமார் 4 செ.மீ. இடைவெளி விட்டு, குறிப்பிட்ட அளவில் (4 செ.மீ. இருக்கலாம்) இரு சம பக்க செங்கோண முக்கோணம் அமைக்கவும். செங்கோணத்தை உள்ளடக்கிய இரண்டு பக்கங்களை ஒவ்வோர் அலகாகக் கொள்ள வேண்டும்.

பித்தகாரஸ் தேற்றத்தின்படி, செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என்பதால், இந்த முக்கோணத்தின் கர்ணம் √டீ2 எனக் கொள்க.

வர்க்கமூலச் சுருள் வரைவோம் !

இப்போது, முதல் முக்கோணத்தின் கர்ணத்தை அடிப் பக்கமாகக் கொண்டு, மற்றொரு செங்கோண முக்கோணத்தை அமைத்தால், அந்த முக்கோணத்தின் கர்ணம் √டீ3 கிடைக்கும். இதேபோல் தொடர்ந்து √டீ10 வரும் வரை முக்கோணங்களை அமைத்தால், வர்க்கமூலச் சுருள் கிடைக்கும்.

ஆசிரியர்கள் இதனை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வரையச் செய்து வண்ணம் தீட்டி அழகுபடுத்தலாம். இதன்மூலம் மாணவர்களுக்குப் பல்வகைக் கணிதச் செயல்பாடுகள் எளிதாகும். செங்கோணத்தைக் காகித மடிப்பு முறையிலும் அமைக்கலாம்.

- இரத்தின. புகழேந்தி, ஆசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.