Published:Updated:

ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றார் விஜய்!

Vikatan Correspondent
ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றார் விஜய்!
ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றார் விஜய்!

சென்னை: பிளஸ்-டூ வில் அதிக மதிப்பெண் பெற்றும் வறுமையினால் மேற்கொண்டு படிக்க முடியாமல் தவித்த மாணவியின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்டார் நடிகர் விஜய். உதவிபெற்ற மாணவி பெற்றோருடன் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றார் விஜய்!

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. தேநீர் கடை தொழிலாளியான இவரது மகள் பாத்திமா அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்தார். கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 1200 க்கு 1109 மதிப்பெண் பெற்ற பாத்திமா, தொடர்ந்து படிக்க விரும்பியும் குடும்பத்தில் போதிய வருமானமி்ல்லாத நிலையில், மேற்படிப்பு படிக்க இயலவில்லை. இது நடிகர் விஜய் கவனத்துக்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அவரது நிலையை கேட்டறிந்த விஜய், பாத்திமா மேற்கொண்டு கல்லுரியில் படிக்க ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்பதாக அறிவித்தார்.

ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றார் விஜய்!

இதையடுத்து பாத்திமா கே.கே நகரில் உள்ள மீனாக்ஷி என்ஜினியரிங் கல்லுரியில் சேர்ந்தார். கல்லுரி கட்டணத்தை விஜய் செலுத்தினார். வறுமையினால் கல்வியை தொடர முடியாத நிலையில் விஜய்யின் உதவியால் தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மனம் நெகிழ்ந்த பாத்திமா நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி கூறினார். இந்த சந்திப்பு நெகிழ்வாக இருந்தது.

ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றார் விஜய்!

“ என்ஜினியரிங் துறையில் ஜ.டி கோர்ஸ் படிக்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை. ஆனால் நல்ல மார்க் எடுத்தும் வீட்டு சூழலிலால்  படிக்க முடியாமல் போய்விட்டது. இந்த நிலையில்தான் விஜய் அண்ணா என் நிலை தெரிந்து உதவுவதாக தெரிவித்து என் படிப்பு தொடர வழி செய்துள்ளார். 'நன்றாக படி எதைப்பற்றியும் கவலைப்படாதே!' என விஜய் அண்ணா என்னிடம் கூறினார். அவரின் இந்த உதவியை என் வாழ்நாள் முழுவதும் மற்க்கமாட்டேன். படித்து நல்ல வேலைக்கு சென்று என் குடும்பத்தை காப்பாற்றுவேன்” என்றார் பாத்திமா நெகிழ்ந்த குரலில்.

பாத்திமாவின் தந்தை சாகுல் ஹமீது “ படிக்கக் கூட வசதியில்லாத சிறிய அறையில் படித்த என் மகள் நல்ல மதிப்பெண் பெற்றாள். ஆனால் வறுமையினால் எங்கு சமையலறையில் முடங்கிவிடுவாளோ என வருந்தினேன். கடவுள் போல விஜய் அவர்கள் என் மகளுக்கு உதவி செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த உதவியை எந்த ஜென்மத்திற்கும் மறக்கமாட்டோம். இனி என் மகள் படித்து நல்ல வேலையில் அமர்ந்து என் குடும்பத்தை காப்பாற்றுவாள். இந்த டீக்கடைக்காரனின் நெஞ்சில் பால் வார்த்த விஜய்க்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை ” என்றார்