பிரீமியம் ஸ்டோரி
##~##

  பெயர்ச்சொல், வினைச்சொல், பேச்சுவழக்குச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்கள் ஆகியவற்றைக் கண்டறியும் விளையாட்டுச் செயல்பாடு இது.

¬கி4 அளவுள்ள ஒரு வரைதாளில் ஒரு சிறுகதையையோ அல்லது நிகழ்வையோ எழுத வேண்டும்.

¬மாணவர்களுக்கு கதையைப் படித்துக்காட்டி, ரசிக்கச்செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் கேட்டல் திறனை மதிப்பிடலாம்.

¬சில மாணவர்களை படிக்கச்செய்ய வேண்டும். இதனால், படிக்கும் திறனை மதிப்பிடலாம்.

கைதையையும் சொற்றொடர்களையும் மாணவர்கள் சிலமுறை கேட்டுப் பழகிய நிலையில், அந்தப் பகுதியை இலக்கண நோக்கில் அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு மாணவர் அல்லது மாணவியை அழைத்து, கதைப் பகுதியில் இடம்பெற்றுள்ள பெயர்ச் சொற்களைக் கோடிட்டுக் காட்டச் செய்யவேண்டும். மற்றொரு மாணவர் அல்லது மாணவியை அழைத்து, கதைப் பகுதியில் இடம்பெற்றுள்ள வினைச் சொற்களைக் கோடிட்டுக் காட்டச் செய்யவேண்டும். இதன்மூலம் பெயர்ச் சொல், வினைச்சொல் கண்டறியும் திறனை மதிப்பிடலாம்.

சொல் விளையாட்டு!

¬வேறொரு மாணவர் அல்லது மாணவியை அழைத்து, கதைப் பகுதியில் உள்ள பேச்சுவழக்குச் சொற்களையும், பிறமொழிச்சொற்களையும் கோடிட்டுக் காட்டச் செய்யவேண்டு. இதைத் தொடர்ந்து, பேச்சுவழக்குச் சொற்களைக் கண்டறியும் திறன் மதிப்பீடு மற்றும் பிறமொழிச் சொற்களைக் கண்டறியும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.

மேற்கண்டவாறு கோடிட்டு அடையாளப்படுத்திய பேச்சுவழக்குச் சொற்களில், வழுஉச்சொற்களை ஒரு மாணவர் அல்லது மாணவி கண்டறிந்து எடுத்து எழுதவேண்டும். மற்றொரு மாணவர் அல்லது மாணவி அவற்றின் திருத்தமான வடிவத்தை எடுத்து எழுத வேண்டும். இதன்மூலம் பிழை கண்டறிந்து எழுதுதல் திறன் மதிப்பீடு செய்யலாம்.

சான்று: யார் பலசாலி?

கந்தன், முகமதுபாரி, ஆல்பர்ட் டேவிட் ஆகிய நண்பர்கள் மூவர் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தனர். 'உலகிலேயே யார் பலசாலி’ என்பதுகுறித்து உரையாடல் நடந்தது. கந்தன், 'அனுமன்தான் பலசாலி’ என்றான். முகமது பாரி 'ஸ்பைடர்மேன்தான்’ என்றான். ஆல்பர்ட் டேவிட், 'எங்கள் அப்பாதான் பூமியைவிடப் பலசாலி’ என்றான். நண்பர்கள் எப்படி என்று ஆர்வத்தோடு வினவினர். அதற்கு, ஆல்பர்ட் டேவிட், ''நேத்திக்கு எங்கப்பா ஒரு பக்கமாகவும், பூமி ஒரு பக்கமாகவும் நின்னு யார் பலசாலின்னு போட்டி போட்டாங்க. கடைசில எங்கப்பாதான் ஜெயிச்சாரு. எப்படின்னா, அந்தப் பக்கம் பூமி வேர்க்கடலைச் செடியைப் புடிச்சுக்கிட்டே நின்னுச்சு. இந்தப் பக்கம் எங்கப்பா மட்டும் தனியா நின்னு போட்டிபோட்டு பலமா இழுத்தாரு. எங்கப்பாவோட பலம் தெரியாம போட்டிபோட்ட பூமி, அவர் பலம் தாங்காம வேர்க்கடலையை விட்டுருச்சு'' என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

பெயர்ச் சொற்கள்: கந்தன், முகமதுபாரி, ஆல்பர்ட்,       டேவிட், நண்பர்கள், மூவர், உலகம், பலசாலி, அனுமன்,    ஸ்பைடர்மேன், அப்பா, ஆர்வம், நேற்று, பூமி, போட்டி, வேர்க்கடலைச் செடி, பலம்.

வினைச் சொற்கள்: சந்தித்து, உரையாடிக் கொண்டிருந்தனர், நடந்தது, வினவினர், போட்டாங்க, புடிச்சிக்கிட்டே, நின்னுச்சு, இழுத்தாரு, தாங்காம, தெரியாமல், விட்டுடுச்சு, சொல்ல, சிரித்தனர்

பேச்சுவழக்குச் சொற்கள்: நேத்திக்கு, எங்கப்பா, எப்படின்னா, நின்னு, நின்னுச்சு, போட்டாங்க, புடிச்சிக்கிட்டே, கடைசியிலே, தெரியாம, தாங்காம

பிறமொழிச் சொற்கள்: பலசாலி, ஸ்பைடர்மேன், ஜெயிச்சாரு.

- ரெ.இரமாதேவி, தமிழ் ஆசிரியை,

அரசு உயர்நிலைப் பள்ளி, ஆவூர், திருவண்ணாமலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு