Published:Updated:

மன வரைபடம் செய்வோம்!

மன வரைபடம் செய்வோம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

 குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரின் கடமைகளை விளக்கும் மன வரைபடம் வரைதல் எனும் செயல்பாட்டை மாணவர்கள் தாங்களே மேற்கொள்ள உதவும் வகையிலான குறிப்புகள்:

குடியரசுத்தலைவரின் கடமைகள்: மன வரைபடத்தில் குடியரசுத்தலைவரின் கடமைகள் என்பதை வழக்கமான காலக் கடமைகள், நெருக்கடி காலக் கடமைகள் என்று இரு அடிப்படைப் பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம். வழக்கமான கடமைகள் என்பதை மேலும் உப பிரிவுகளாக, நிர்வாகம் சார்ந்தவை, மக்கள் மன்றம் சார்ந்தவை, நீதித் துறைக் கடமைகள் மற்றும் நிதித் துறைக் கடமைகள் எனப் பிரிக்கலாம்.

பின்வரும் குறிப்புகளில் இருந்து உரிய உபதலைப்புகளுக்கான விளக்கத்தை த்தயாரிக்கலாம்.

மன வரைபடம் செய்வோம்!

1. நிர்வாகம் சார்ந்த கடமைகள்: நாட்டின் நிர்வாகத் தலைவராக செயல்படுவது, தேர்தல் ஆணையத் தலைவர், அட்டர்னி ஜெனரல், தணிக்கைக் குழுத் தலைவர், மத்திய பணியாளர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ராணுவத் தளபதி என நாட்டின் உயர் பதவிகளை நியமிப்பது.

2. மக்கள் மன்றம் சார்ந்த கடமைகள்: மத்திய நாடாளுமன்றத்தின் தலைவராக செயல்படுவது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது.

3. நீதித் துறைக் கடமைகள்: நீதித் துறை உயர் பதவிகளான உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பது, மரண தண்டனை உள்பட குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கவோ, தள்ளுபடியோ செய்யும் அதிகாரம்.

4. நிதித் துறைக் கடமைகள்: நிதி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகமாவதற்கு பரிந்துரை செய்வது, எதிர்பாரா செலவு நிதியிலிருந்து செலவளிக்கும் உரிமையை அரசுக்கு வழங்குவது.

அடுத்ததாக, நெருக்கடி நிலைக் கடமைகள் என்பதின் உபதலைப்புகளாக தேசிய நெருக்கடி,  மாநில நெருக்கடி, மற்றும் நிதி நெருக்கடி என்பதாக வரைபடத்தில் குறித்துக்கொண்டு, அவற்றுக்கான விளக்கக் குறிப்புகளைக் கீழ்கண்டவற்றில் இருந்து கையாளலாம்.

1.தேசிய நெருக்கடி காலக் கடமைகள்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான போர், அயல்நாட்டுப் படையெடுப்பு, ராணுவக் கிளர்ச்சி போன்றவை ஏற்படும்போது, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தி நாட்டை ப்பாதுகாப்பது.

2. மாநில நெருக்கடி கால கடமை: ஒரு மாநில அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறும்போது, அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி மாநில நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வது.

3. நிதி நெருக்கடி கால கடமைகள்: தேசியப் பொருளாதாரத்துக்கு நெருக்கடி தோன்றும்போது, ஒரு பகுதி அல்லது நாடு முழுக்க நெருக்கடி நிலையை அமலாக்கி, நிலைமையைச் சீராக்க உதவுவது.

பிரதமரின் கடமைகள்:

பிரதமரின் கடமைகள் என்ற பிரதான தலைப்பின் பின்வரும் குறிப்புகளுடன் மன வரைபடத்தை நிறைவுசெய்யலாம்:

மத்திய அமைச்சரவையின் தலைவராகச் செயல்படுவது.

மத்திய அமைச்சரவை இலாகாக்களுக்கான உரிய அமைச்சர்களைப் பரிந்துரைப்பது.

அமைச்சர்களின் செயற்பாடுகளை மேற்பார்வை இடுவது.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் தனது தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்ற உதவுவது.

அரசின் நிதிக் குழு, தேசிய ஒற்றுமைக் குழு, திட்டக் குழு போன்றவற்றின் தலைவராகச் செயல்படுவது.

அரசின் கொள்கை முடிவுகள், பட்ஜெட் உருவாக்கம் போன்றவற்றை வழிநடத்துவது.

குடியரசுத்தலைவரின் முக்கிய முடிவுகளில் உரிய பரிந்துரைகளை வழங்குவது.

- எஸ்.ஜானவிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு