Published:Updated:

ஷாலியாகப் படிக்கலாம் வாங்க!

ஷாலியாகப் படிக்கலாம் வாங்க!

பிரீமியம் ஸ்டோரி
##~##

 ஆசிரியர் முதலில் ஆறு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களைக் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் மற்றும் தோல் ஆகியோர் என மற்ற மாணவர்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். இப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் தொடங்கும்.  

கண்: ''நான் யார் தெரியுமா? உடல் உறுப்புகளிலேயே நான்தான் பெரியவன். நான் இல்லையென்றால், இந்த உலகத்தை உங்களால் பார்க்கவே முடியாது. அதனால், நான்தான் பெரியவன்!''

காது: ''என்னை எல்லாரும் மறந்துட்டீங்களா? நான் இல்லையென்றால் மற்றவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்க முடியாது. இனிமையான ஓசைகளைக் கேட்க முடியாது. அதனால் நான் தான் உயர்ந்தவன்!''

மூக்கு: ''நான் மட்டும் இல்லேன்னா, மூச்சுவிட முடியாது. வாசனைகளை உணர முடியாது. அதனால் நான்தான் பெரியவன்!''

நாக்கு: ''நான் மட்டும் இல்லேன்னா, உங்களால சரியாப் பேச முடியாது. சுவைகளை உணர முடியாது. அதனால நான்தான் பெரியவன்!''

ஷாலியாகப் படிக்கலாம் வாங்க!

தோல்: ''நான் யார் தெரியுதா? நான் இல்லேன்னா, உங்கள் உடல் அழகாக இருக்காது. உணர்ச்சியே இருக்காது. அதனால் நான்தான் உயர்ந்தவன்!''

மூளை: ''நிறுத்துங்க... நான் இருக்கிறதை மறந்து எல்லாரும் வாக்குவாதம் பண்றீங்க. நான் மட்டும் இல்லேன்னா நீங்க யாருமே அவங்கவங்க வேலையைச் செய்ய முடியாது. எல்லாரும் செயல் இழந்து போய்டுவீங்க. அதனால் நான்தான் பெரியவன்!''

இவ்வாறு நடித்து முடித்த பிறகு, இந்த உறுப்புகளைப் பற்றி இன்னும் விரிவாக வகுப்பில் விவாதிக்கலாம். ஆசிரியர் கேள்விகளைக் கேட்டு, மாணவர்களைப் பதில் சொல்ல வைக்கலாம். இதன் தொடர்ச்சியாக, மூன்று செயல்பாடுகளை வகுப்பில் அரங்கேற்றலாம். இதில், ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்புத் தரப்பட வேண்டும்.

செயல்பாடு 1: மூளையின் பணிகள், அமைப்பு, பாதுகாப்பு பகுதிகள் போன்றவற்றைப் பேசி நடிக்கச் சொல்லுதல்.

செயல்பாடு 2: புலன் உறுப்புகளின் பணிகளைப் பற்றி, மாணவர்களை அழைத்து சோதித்தறிதல். (மல்லிகைப்பூ, சர்க்கரை, மணி, பொம்மை என ஒவ்வொரு பொருளாக எடுத்து, மாணவனை அழைத்து வாசனையை எந்த உறுப்பின் மூலம் உணர்ந்தாய் என்று கேட்டறிதல்.)

செயல்பாடு 3:  மூளைப் பாதுகாப்புபற்றிய நாடகம் ஒன்றைத் தயார் செய்து, பொம்மலாட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தச் சொல்லலாம்.

- ஆர்.மேனகா, ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,
வையாவூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு