Published:Updated:

மத்திய,மாநில அரசு வரிகள்

மத்திய,மாநில அரசு வரிகள்

மத்திய,மாநில அரசு வரிகள்

மத்திய,மாநில அரசு வரிகள்

Published:Updated:
##~##

அரசுகள், தங்களது நடவடிக்கைகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் மக்களிடம் இருந்து ஒரு கட்டணத்தைப்போல பெற்றுக்கொள்ளும் தொகைகளுக்கு, 'வரி’ என்று பெயர். உதாரணமாக, சாலைகளைப் பராமரிப்பதற்காக மக்களிடமிருந்து பெறப்படும் கட்டணம், 'சாலை வரி’. பொருட்களின் விற்பனைகளை ஒழுங்குபடுத்தி, மக்களுக்குக் குறையில்லாமல் அவை கிடைக்கக் காரணமாக இருப்பதால், அந்தப் பொருட்களின் மீது மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணமும் ஒரு வகை வரியே.

றீஇதுபோன்ற வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வசூலிக்கின்றன. இவை தவிர, நகராட்சிகள், பஞ்சாயத்துகள் போன்றவையும் வரி வசூலில் ஈடுபடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

றீவரிகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் வசூலிக்கப்படுகின்றன. ஒருவர் பெறும் சம்பளத்துக்கு ஆண்டுதோறும் நேரடியாக வசூலிக்கப்படுவது, 'நேரடி வரி’. நாம் வாங்கும் பொருட்களின் மீது விதிக்கப்படும் விற்பனை வரிகள், மதிப்புக் கூட்டு வரிகள் போன்றவை 'மறைமுக வரிகள்’.

மத்திய அரசு வரிகளில் சில:

விவசாயம் சாராத தொழில்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மீது விதிக்கப்படும் வருமான வரிகள்.

ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள்.

மத்திய,மாநில அரசு வரிகள்

ரயில், கப்பல், விமானம் மூலம் கொண்டுசெல்லப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள்.

கல்வி வளர்ச்சிக்காக வசூலிக்கப்படும் 'செஸ்’ (CESS) எனப்படும் வரி.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரிகள்.

உணவகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது விதிக்கப்படும் சேவை வரிகள்.

சொத்துகளின் மீது விதிக்கப்படும் வரிகள்.

மாநில அரசு வரிகளில் சில:

றீதிரையரங்குகள், தொலைக் காட்சிகள் மற்றும் பொருட்காட்சிகள் போன்று மக்களை மகிழ்விக்கும் பொருட்கள், இடங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் போன்றவை கேளிக்கை வரிகள் எனப்படும்.

முத்திரைத்தாள்கள் மீது விதிக்கப்படும் வரி.

விவசாயப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள்.

சொத்து மற்றும் நில வரி.

சாலை வழி எடுத்துச் செல்லப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக்கொண்டு, 'மத்திய, மாநில அரசின் வரிகள்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைத் தயார்செய்து ஆசிரியரிடம் அளித்து, மதிப்பீட்டைப் பெறலாம்.

- சுப.தமிழினியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism