Published:Updated:

வேற்றுமையில் ஒற்றுமை !

வேற்றுமையில் ஒற்றுமை !

வேற்றுமையில் ஒற்றுமை !

வேற்றுமையில் ஒற்றுமை !

Published:Updated:
##~##

பென்னாகரம் ஒன்றியம் பிக்கம்பட்டி நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர் ப.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்த்திய வேற்றுமையில் ஒற்றுமை எனும் விவாதமேடை.

மோனிஷா: பல இனங்களின் அருங்காட்சியகமாகத் திகழும் நமது இந்திய நாடு, பல வெளிநாட்டினரின் ஆட்சிக்குப் பின்னும் ஒற்றுமையுடன் திகழ்கிறது.   எதிரிகள் நம்மை அச்சுறுத்தியபோது, ஒருமுகமாக எழுந்துநின்றதை நாம் அறிவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோகுல்நாத்: 'செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்’ எனும் பாரதியின் கருத்துக்கேற்ப இந்தியாவில் சுமார் 845 மொழிகள் பேசினாலும், நாம் மொழி, சமயம், சாதி வேறுபாடுகளின்றி வாழ்கிறோம் அல்லவா? இது, நம் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துகின்றது.

சத்யா: நம் நாட்டில் கொண்டாடுகின்ற தீபாவளி, பொங்கல், ராமநவமி, துர்கா பூஜை, ரம்ஜான், கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற சமய விழாக்களில், எல்லா சமயத்தவரும் மகிழ்வோடு கலந்துகொண்டு, சகோதரத்துவத்தையும் சமய நல்லுறவையும் வளர்ப்பது, வேற்றுமையில் ஒற்றுமைக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு.  

வேற்றுமையில் ஒற்றுமை !

பாலாஜி: நம்  உணவுகளிலும்  உடைகளிலும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பல வகைகள்... வேறுபாடுகள். ஆனால், நாம் வேறுபாடு மறந்து வெவ்வேறு வகை உணவு வகைகளையும், இனிப்பு வகைகளையும் உண்டும், ஆடைகளை அணிந்தும் 'இந்தியர்’ என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

சினேகா: இந்தியாவின் ஓவியங்கள், சிற்பங்கள் நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்றன. தென்னகத்தில் இருப்போர் காசி, ஹரித்துவார், புத்த கயா போன்ற புனிதத் தலங்களுக்கும், வட இந்தியாவில் வாழ்பவர்கள் ராமேஸ்வரம், திருப்பதி, நாகூர், வேளாங்கண்ணி போன்றவற்றுக்கும் சென்றுவருவது, நமது ஒற்றுமை உணர்வைக் குறிக்கின்றது.

சபரி: பரதம், குச்சுப்புடி, கதக், மணிப்புரி, ஒடிசி என நாட்டியத்திலும், கர்நாடகம், இந்துஸ்தானி, தமிழிசை என இசையிலும் விதவிதமான பாரம்பரியக் கலைகள் உள்ளன. நாம் அதனை வேறுபாடு கருதாது ரசிக்கின்றோம். இதுவும் நமது ஒற்றுமைக்குச் சான்று.

சுமித்ரா: நமது தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களும் இணைந்து பட்டொளி வீசிப் பறப்பதுபோல, நமது நாட்டின் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மக்களும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்றுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகுமார்: நன்றி நண்பர்களே... மொழி, உணவு, பழக்கவழக்கங்கள், உடை, கொள்கை, சமயம் போன்றவற்றால் இந்திய மக்கள் வேறுபட்டு வாழ்ந்தாலும், 'இந்தியர்’ என்ற பெயராலும் உணர்வாலும் ஒன்றுபட்டு நிற்பதைப் பாதுகாப்போம்.

சரவணன் (ஆசிரியர்): அருமைக் குழந்தைகளே, உங்கள் எண்ணங்களை வண்ணமயமாக எடுத்துவைத்தீர்கள். இதன் அடிப்படையில் 'வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் 'செயல்திட்டம்’ ஒன்றைத் தயாரித்து வாருங்கள்.

- த.சிங்காரவேலன்,
தர்மபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism