Published:Updated:

குரூப்–2 மெயின் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு!

Vikatan Correspondent
குரூப்–2 மெயின் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு!
குரூப்–2 மெயின் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு!
குரூப்–2 மெயின் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–2 மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகின்ற 26 ஆம் தேதி தொடங்க உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை உதவி அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு குரூப்–2 முதல்நிலை தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி முடிவை அறிவித்தது.

அதில், தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வு எழுதினார்கள். மெயின் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், 5 ஆயிரத்து 635 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் எண்களும் இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகின்ற 26 ஆம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த பின்னர் நேர்முகத்தேர்வுக்கு எத்தனை பணியிடங்கள் தேவையோ? அதற்கு 2 மடங்கு (1:2) என்ற விகிதத்தில் அழைக்கப்படுவார்கள். பின்னர் இறுதி முடிவு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) தெரிவித்து உள்ளார்.