Published:Updated:

வேலை கிடைக்குமா...விடிவு பிறக்குமா... கூட்டுறவை நோக்கி ஒரு கூக்குரல்!

Vikatan Correspondent
வேலை கிடைக்குமா...விடிவு பிறக்குமா... கூட்டுறவை நோக்கி ஒரு கூக்குரல்!
வேலை கிடைக்குமா...விடிவு பிறக்குமா... கூட்டுறவை நோக்கி ஒரு கூக்குரல்!
வேலை கிடைக்குமா...விடிவு பிறக்குமா... கூட்டுறவை நோக்கி ஒரு கூக்குரல்!

சென்னை: கூட்டுறவுத்துறையில் ஊழியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு 2 ஆண்டுகள் கடந்தும் பணி நியமனம் வழங்கப்படாததால் அத்தேர்வினை எழுதிய 4213 தேர்வர்கள் கொதிப்பில் உள்ளனர்.

கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 3859 இளநிலை உதவியாளர் பணி இடங்களுக்கு 9.12.2012 அன்று தேர்வு நடைபெற்றது. 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு 28.12.2012 அன்று சென்னையில் நேர்முகத் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றன. பின்னர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் 2013 ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடைபெற்றது.

இதற்கிடையே, தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, உயர் நீதிமன்றம் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. தேர்ச்சி பெற்ற 7,200 பேர் சார்பில் உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத் ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, நடத்தப்பட்ட தேர்வுக்கான விடைகளை கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டுமென்றும், கட் ஆஃப் மதிப்பெண்களை வெளியிட வேண்டுமென்றும் ஜூலை 15ஆம் தேதி தீர்ப்புக் கூறினர். இந்தத் தீர்ப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இது வரை பணி நியமனம் செய்யப்படவில்லை.

பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் நேர்முக தேர்வு அந்தந்த மாவட்டத்தில் வைக்கப்பட்டது. அதில் 4213 பேர் கலந்து கொண்டார்கள். பின்பு ஜனவரி 2015 இல் நேர்முக தேர்வு மதிப்பெண் மட்டும் வெளியிடப்பட்டது. இதுவரை தேர்வானவர்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணை அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தேர்வானவர்களின் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலை கிடைக்குமா...விடிவு பிறக்குமா... கூட்டுறவை நோக்கி ஒரு கூக்குரல்!

தகுதியும், திறமையோடும் தேர்வு எழுதி ஒரு பணி நியமனத்திற்காக 3 ஆண்டுகள் காத்திருந்தால் எதிர்காலத்தில் நாங்கள் வயது காரணமாக சிக்கல்களை சந்திக்கவேண்டியதிருக்கும் என புலம்புகிறார்கள் அவர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், “ மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு சாமர்த்தியமாக அதிகாரிகள் பணி நியமனம் வழங்கப்பட்டது போன்ற மாயையை உண்டாகி அப்போதைக்கு அந்த பிரச்னையை அடக்கிவிட்டனர். ஆனால், இன்றுவரை எங்களுக்கு விடிவு இல்லை. இதற்காக 4213 பேர் காத்து இருக்கின்றனர். மீண்டும் எங்களை பணியில் அமர்த்த நிர்வாகத்தினர் காலம் தாழ்த்துகின்றனர்.

கால தாமதத்திற்கு சரியான காரணமும் தெரியவில்லை. எப்போது அதிகாரிகளை அணுகினாலும் பத்து நாட்களில் வரும் என்று இன்று போய் நாளை வா கதையாக காலம் கடத்துகின்றனர். திறமையாக தேர்வு எழுதிய எங்களுக்கு அரசு காட்டும் அணுகுமுறை சரியானதா. விரைவில் அரசு இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.