Published:Updated:

`சிறுவர்களை இப்படியா கட்டிவைப்பீர்கள்?!' - அரசுப் பள்ளியின் செயலால் கொதித்த சமூக ஆர்வலர்கள்

ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளியில் இரு சிறுவர்களைப் பள்ளியின் மேஜையில் கட்டி வைத்திருப்பது மாதிரியான படங்கள் இணையத்தில் வெளியாகி பெற்றோர்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது.

கட்டிவைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்
கட்டிவைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் கடிரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு மாணவன் 3 -ம் வகுப்பு, மற்றொரு மாணவன் 5 -ம் வகுப்பு. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய சமூக ஆர்வலர் அச்யூதா ராவ், `மாணவர்களை இப்படிக் கட்டிவைத்த ஆசிரியர் மற்றும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்” என்றார் கொதிப்புடன்.

மாணவர்கள்
மாணவர்கள்
Representational image

இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த இரு மாணவர்களில் ஒருவர் வகுப்பில் காதல் கடிதம் எழுதியுள்ளார். மற்றொரு மாணவர் வகுப்பில் மற்ற மாணவர்களின் பொருள்களைத் திருடியுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், தானோ அல்லது பள்ளி ஆசிரியர்களோ அவர்களை கட்டிப்போடவில்லை எனவும், அவர்களின் பெற்றோர்கள்தான் அப்படி செய்ததாகவும் கூறியுள்ளார்.

எனினும், பள்ளி வளாகத்தில் மாணவர்களை இப்படிக் கட்டிப் போட ஆசிரியர்கள் ஏன் அனுமதித்தார்கள் என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், உள்ளூர் ஊடகத்திடம் பேசுகையில், `இந்தப் பள்ளியில் இதொன்றும் புதிதல்ல.. வழக்கமாக நடப்பதுதான்' என தெரிவித்துள்ளனர்.

கட்டிப் போடப்பட்ட சிறுவர்கள்
கட்டிப் போடப்பட்ட சிறுவர்கள்

இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் சிறுவர்கள்.. அவர்களது செயலில் தவறு இருந்தாலும் அதை முறையாக எடுத்துச்சொல்லி திருத்துவதுதான் கடமையாக இருக்குமே தவிர இப்படி தண்டனை அளித்தால் ஒருவித அச்சத்துடனே அவர்கள் சமூகத்தை எதிர்கொள்வார்கள் எனப் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.